டெல்லி சங்க விகார் பகுதியைச் சேர்ந்தவர் ஷாபனா. (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). காவல்துறையில் பணியாற்றுவதற்காக பயிற்சி பெற்று வந்த நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு முன்னதாக காவல்துறையில் பணி கிடைத்தது.
டெல்லி எஸ்.டி.எம் அலுவலகத்தில் பணியாற்றி வந்த ஷாபனா கடந்த 27ம் தேதி கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளதாக செல்லி காவல்துறைக்கு தகவல் வந்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலிஸார் ஷபா உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலிஸார் விசாரணை நடத்தியதில், அவருடைய காதல் நிஜாமுதீன் என்பவரை போலிஸார் கைது செய்தனர். அப்போது நிஜாமுதீனிடம் நடத்திய விசாரணையின் போதுநான் தான் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.
மேலும் அவர், இரண்டு பேரும் பல வருடங்களாக காதலித்தோம். பெற்றோர் சம்பதிக்காததால், வீட்டைவிட்டு வெளியேறி தனியாக வசித்து வந்தோம். இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே ஷாபனா நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்தது. இந்நிலையில் ஷாபனாவுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருந்ததால் அவரை பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் சென்று கொலை செய்தாக தெரிவித்துள்ளார்.
இதனிடையே பிரேத பரிசோதனை அறிக்கையில், ஷாபனா உடலில் 21 இடங்களில் கொடூரமாக கத்திகுத்து இருந்ததாக கூறியுள்ளனர். இந்நிலையில், கொலையை நியாயப்படுத்தும் வகையில், தனது மகளின் மீது வீண்பழிப்போடுகிறார்; எனது மகளை நிஜாமுதீன் மற்றும் அவரது நண்பர்கள் கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக ஷாபனா தாயார் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஷபானாவில் இத்தகைய சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று டெல்லியில் உள்ள பொதுமக்களும், சிறுபான்மையினரும் போராட்டத்தில் குதித்துள்ளனர். அதேபோல நாடு முழுவதும் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனங்கள் எழுத்து வருகின்றன. சமூக வலைதளங்களிலும் #JusticeForSabiya என ஹாஸ்டேக்கிலும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.