இந்தியா

“ஒன்றிய அரசு மதிப்பதில்லை.. நீதிமன்றத்தின் பொறுமையைச் சோதிக்காதீர்கள்” : தலைமை நீதிபதி கடும் கண்டனம்!

நீதிமன்றங்களின் உத்தரவை ஒன்றிய அரசு மதிப்பதே இல்லை என தலைமை நீதிபதி வருத்தம் தெரிவித்துள்ளார்.

“ஒன்றிய அரசு மதிப்பதில்லை.. நீதிமன்றத்தின் பொறுமையைச் சோதிக்காதீர்கள்” :  தலைமை நீதிபதி கடும் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திரைப்படத் தணிக்கை தீர்ப்பாயம் உள்பட 8 தீர்ப்பாயங்களை ரத்து செய்து சட்டம் இயற்றப்பட்டதற்கு ஒன்றிய அரசு மீது உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தியைத் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் தீர்ப்பாயங்கள் ரத்து செய்து சட்டம் இயற்றப்பட்டது தொடர்பாகக் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் டெல்லி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அதில்,”கடந்த மழைக்கால கூட்டத் தொடரின்போது, உரிய விவாதம், வாக்கெடுப்பு இல்லாமல் மசோதா நிறைவேற்றப்பட்டது.

அரசியல் சாசனத்துக்கு எதிராக மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மேலும், நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட சட்டத்தை ஏன் ரத்துசெய்யக் கூடாது என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வுக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், “ஜி.எஸ்.டி குறைபாடுகளைத் தீர்க்க ஜி.எஸ்.டி சட்டத்தின் படி ஏன் 4 ஆண்டுகள் ஆகியும் இன்னும் தீர்ப்பாயம் அமைக்கவில்லை. தீர்ப்பாயங்களுக்குத் தலைவர், உறுப்பினர்களை அரசால் நியமிக்க முடியவில்லை என்றால் நீதிமன்றமே நியமிக்கும். நீதிமன்ற உத்தரவுகளை அரசு மதிப்பதே இல்லை. ஏன் நீதிமன்றத்தின் பொறுமையைச் சோதிக்கிறீர்கள்.

நீதிமன்ற உத்தரவுகளைச் செயல்படுத்தாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும். இதுதான் கடைசி வாய்ப்பு, திங்கள் கிழமைக்குள் நியமனங்களை நடத்த வேண்டும்” என தலைமை நீதிபதி ஒன்றிய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

banner

Related Stories

Related Stories