பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க-வினர் எப்போதுமே நேரு வெறுப்பைக் கையாண்டு வருகின்றனர். முன்னாள் பிரதமர் நேருவின் நடவடிக்கைகளைக் குறை சொல்வதை அக்கட்சியைச் சேர்ந்த பலரும் வாடிக்கையாக வைத்துள்ளனர்.
பா.ஜ.க அரசின் குறைபாடுகளை மறைக்க நேருவை விமர்சிப்பது அக்கட்சியினரின் வழக்கம். நேரு, பா.ஜ.க-வின் தாய் இயக்கமான ஆர்.எஸ்.எஸ்ஸை கடுமையாக எதிர்த்ததன் காரணமாகவே அவர்கள் நேரு வெறுப்பைக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாது, ஒன்றிய கல்வித்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஹெச்ஆர்) அமைப்பு, சமீபத்தில் நடந்த சுதந்திர தின நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, அபுல் கலாம் ஆசாத் ஆகியோரின் புகைப்படங்கள் இல்லாமல் பதாகை வெளியிட்டது. இது அரசியல் கட்சியினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சுதந்திர தின நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, அபுல் கலாம் ஆசாத் ஆகியோரின் புகைப்படங்கள் இல்லாமல் பதாகை வெளியிட்டது. இது ஒன்றிய அரசின் குறுகிய புத்தியையும், பழிவாங்கும் செயலையும் குறிக்கிறது என சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளேடானா சாம்னாவில் சஞ்சய் ராவத் எழுதிய கட்டுரை ஒன்று எழுதியுள்ளார். அந்தக் கட்டுரையில், “வரலாற்றை உருவாக்கியதிலும், சுதந்திரப் போராட்டத்திலும் எந்தப் பங்களிப்பும் இல்லாதவர்கள் சுதந்திரப் போராட்டத்தின் ஹீரோக்களில் ஒருவரான நேருவின் படத்தை ஒதுக்கி வைத்துள்ளார்கள்.
இது ஒரு ஆரோக்கியமான செயல் அல்ல, குறுகிய நோக்கம் கொண்டதாகும். இதன் மூலம் ஒவ்வொரு சுதந்திரப் போராட்ட வீரரையும் மோடி அரசாங்கம் அவமானப்படுத்துகிறது. சுதந்திரப் போராட்டத்தின் நேருவின் பங்களிப்பை யாராலும் மறுக்கமுடியாது; அவரை புறக்கணிக்கும் அளவிற்கும் ஜவஹர்லால் நேருவை வெறுப்பதற்கும் அவர் என்ன செய்தார்?
இன்று பொருளாதாரத்தை நகர்த்துவதற்காக ஒன்றிய அரசு விற்க முயலும் பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் நேருவால் உருவாக்ககப்பட்டவைதான். பொருளாதாரப் பேரழிவில் இருந்து நாட்டைக் காக்க வேண்டும் என்பதற்காக நீண்டகால நோக்கில் நேரு உருவாக்கியதாகும்.” எனத் தெரிவித்துள்ளார்.