இந்தியா

“மனைவியிடம் கணவர் கட்டாய உடலுறவு கொண்டால் அது பாலியல் வன்கொடுமை ஆகாது” : நீதிமன்றம் சர்ச்சை தீர்ப்பு!

மனைவியிடம் கணவர் கட்டாய உடலுறவு கொண்டால் அதுபாலியல் வன்கொடுமை ஆகாது என்று சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

“மனைவியிடம் கணவர் கட்டாய உடலுறவு கொண்டால் அது பாலியல் வன்கொடுமை ஆகாது” : நீதிமன்றம் சர்ச்சை தீர்ப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

“சட்டப்படி திருமணம் செய்து கொண்ட மனைவியின் வயது 18 வயதுக்குகீழ் இல்லாத பட்சத்தில், அவரை கட்டாயப்படுத்தியோ அல்லது விருப்பத்திற்கு மாறாகவோ கணவர் உடலுறவு கொண்டால் அதுபாலியல் வன்கொடுமை ஆகாது” என்று சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வாரம் இதேபோன்ற வழக்கில் தீர்ப்பளித்த கேரள உயர் நீதிமன்றம், “மனைவியின் விருப்பமில்லாமல் உடலுறவு கொள்வது, கணவன், மனைவி மீது செலுத்தும் பாலியல் வன்கொடுமையே ஆகும். இந்த விஷயத்தை காரணமாகக் காட்டி மனைவி விவாகரத்து கோரலாம். மனைவியின் உடல் தனக்கு சொந்தம் என்று கணவர் எண்ணுவதற்கு நவீன சமூக நீதித்துறையில் இடமில்லை” என்று கூறியிருந்த நிலையில், சத்தீஸ்கர் தீர்ப்பு கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

பாலிவுட் பாடகி சோனா மொகபத்ரா இந்த விவகாரம் தொடர்பாக குறிப்பிட்டு ‘ஆணுக்குப் பெண் அடிமை என்ற மனநோய் மாற வேண்டும்’ என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

“இந்த இந்தியாவை (சத்தீஸ்கர் உயர்நீதிமன்றத் தீர்ப்பு) படிக்கும் போது எனக்கு ஏற்படும் உடல்நலக்குறைவு நான் இங்கு எழுதக்கூடிய எதையும் தாண்டியது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நான் “இதை மட்டும்தான் (நீதிபதிகளின் இதுபோன்ற தீர்ப்பை) இன்னும் கேட்காமல் இருந்தேன்” என்று பிரபல திரைக்கலைஞர் டாப்சி விமர்சித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories