இந்தியா

“காவி கட்சியின் உண்மை முகம்”.. துப்பாக்கியால் சுட்டு வரவேற்பு அளித்த பா.ஜ.கவினர் - 3 போலிஸார் சஸ்பெண்ட்!

கர்நாடகாவில் ஒன்றிய அமைச்சருக்குத் துப்பாக்கியால் சுட்டு வரவேற்பு நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

“காவி கட்சியின் உண்மை முகம்”.. துப்பாக்கியால் சுட்டு வரவேற்பு அளித்த பா.ஜ.கவினர் - 3 போலிஸார் சஸ்பெண்ட்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஒன்றிய உரம் மற்றும் ரசாயனத் துறை இணை அமைச்சராக இருப்பவர் பகவந்த் கூபா. இவர் கர்நாடக மாநிலத்தில் உள்ள யாதகிரியில் மக்களைச் சந்திப்பதற்காக வந்துள்ளார். அப்போது ஒன்றிய அமைச்சரை வரவேற்பதற்காகக் கூடியிருந்த பா.ஜ.க தொண்டர்கள் தங்கள் கைகளில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கிச் சுட்டு அவரை வரவேற்றனர்.

இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் பாபுராவ் சின்சனூர், பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜூ கவுடா, வெங்கிடரெட்டி முத்னால் ஆகியோர் முன்னிலையில்தான் இந்த துப்பாக்கிச் சூடு வரவேற்பு நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி கடும் எதிர்ப்புகள் எழுந்தது.

பின்னர் கர்நாடக போலிஸார் பாபுராவ் சின்சனூர் உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் பாதுகாப்புப் பணியில் அலட்சியமாக இருந்ததாக மூன்று காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். “வட மாநிலங்களில்தான் இது போன்ற திகிலூட்டும் காட்சிகளை நாங்கள் பார்த்தோம். இந்த அசிங்கத்தை பா.ஜ.கவினர் கர்நாடகத்திற்குக் கொண்டு வருகிறார்கள். இது காவி கட்சியின் உண்மையான முகத்தையும் கலாச்சாரத்தையும் காட்டுகிறது என கர்நாடக காங்கிரஸ் கட்சி கண்டித்துள்ளது.

banner

Related Stories

Related Stories