‘உண்மையான வரலாற்றை அறியலாம் வாங்க’ எனும் தலைப்பிலான கிளப் ஹவுஸ் விவாதத்தில் முரட்டு சங்கி ஒருவர், “கோட்சே காந்தியை நோக்கிச் சுடவே இல்லை. கோட்சே துப்பாக்கியால் சுடும்போது காந்தி குறுக்கே வந்துவிட்டார். கோட்சேவை காந்தி திட்டமிட்டு கொன்றதாகக் கூறுவது கற்பனைக் கதை” என அளந்து விட்டிருக்கிறார்.
இதுதொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்துத்வா வெறியர்களின் இத்தகைய வரலாற்றைத் திரிக்கும் போக்குக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தேசப்பிதா மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கொலையாளியான நாதுராம் கோட்சே, காந்தியைக் கொன்றதற்காக மரண தண்டனை அளிக்கப்பட்டு அம்பாலா சிறையில் 1949ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்டவர்.
கோட்சே, மகாத்மா காந்தியை 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி மாலை நேர காந்தியின் பிரார்த்தனை கூட்டத்தில் அவரை மண்டியிட்டு வணங்கியபின் மிக அருகில் நின்று மூன்று முறை சுட்டுக் கொலை செய்ததும், காவல்துறையினரிடம் தானே சரணடைந்ததும் வரலாறு.
மேலும், காந்தி படுகொலைக்கு முன்னர், அவரைக் கொல்ல மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முயற்சிகளிலும் நாதுராம் கோட்சே தொடர்பு கொண்டிருந்ததை வரலாறு அறிந்தவர்கள் அனைவரும் அறிவர்.
மகாத்மாவைக் கொன்ற இந்துத்வ வெறி கொண்ட கொலையாளியை புனிதப்படுத்தும் வேலையில் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்துத்வ அமைப்புகள் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றன.
இந்திய அரசியலின் மிக முக்கியமான நிகழ்வான காந்தி படுகொலை வரலாற்றையே பொய்யாகச் சித்தரிக்கும் வேலையை இந்துத்வா கும்பல் சமூக வலைதளங்களில் மேற்கொண்டு வருவது பெரும் அச்சத்தை விளைவிப்பதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.