டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான பளுதூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்திருந்தார் மணிப்பூரைச் சேர்ந்த மீராபாய் சானு. இவரின் இந்த வெற்றியை நாடே இன்னும் கொண்டாடி வருகிறது.
இந்நிலையில், தனது கிராமத்திற்கு வந்த மீராபாய் சானு, நன்றி மறவாமல் தனது பயிற்சிக்கு உதவிய 150 லாரி ஓட்டுநர்களை வீட்டிற்கு அழைத்து அவர்களுக்குப் புத்தாடை மற்றும் மதிய விருந்து வழங்கி பெருமைப்படுத்தியுள்ளார்.
மணிப்பூரின் தலைநகரமான இம்பால் நகரிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது நோங்போங் கக்சிங் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் தான் மீராபாய் சானு. தனது பளுதூக்கும் பயிற்சிக்காக இங்கிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இம்பலுக்குத் தினமும் லாரியில் லிப்ட் கேட் சென்றுவந்துள்ளார்.
இவன் ஆர்வத்தைப் பார்த்து லாரி ஓட்டுநர்களும் மீராபாய் சானுவுக்கு உதவி வந்துள்ளனர். இப்படி எளிய மக்கள் செய்த உதவிதான் இன்று மீராபாய் சானுவை ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வெல்ல உதவியிருக்கிறது. இந்த நன்றையை மறவாது அவர்களுக்கு விருந்து படைத்த மீராபாய் சானுவின் செயலுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.