ராஜஸ்தான் மாநிலம், சித்தோர்கர் மாவட்டத்தில் சர்னேஷ்வர் மகாதேவ் கோவில் உள்ளது. இந்தக் கோயிலின் பூசாரி பெண் ஒருவருடன் கோயிலில் உள்ள தனி அறையிலிருந்துள்ளார்.
இதைப் பார்த்த கிராம மக்கள் கோயிலில் இருவரும் தவறு செய்வதாக நினைத்து சரமாரியாக அடித்துத் தாக்கியுள்ளனர். மேலும் பூசாரியுடன் இருந்த பெண்ணின் ஆடைகளைக் கிழித்து, செருப்பால் அடித்துள்ளனர்.
பின்னர், கிராம மக்களால் தாக்கப்பட்ட பெண் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதில்,"எனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தவே என்னைத் தாக்கி, ஆடையைக் கிழித்து அவமானப்படுத்தியுள்ளனர்.
நாங்கள் கோவிலில் தனியாக இருந்ததைத் தவறாகப் புரிந்து கொண்டு எங்களைத் தாக்கியுள்ளனர். எங்களை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபடுவேன்" என தெரிவித்துள்ளார். இது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.