இந்தியா

'நாடு முழுவதும் 24 போலி பல்கலைக்கழகங்கள்... பா.ஜ.க ஆளும் உ.பியில் மட்டும் 8' : பகீர் தகவலை வெளியிட்ட UGC!

இந்தியாவில் 24 போலி பல்கலைக்கழகங்கள் செயல்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

'நாடு முழுவதும் 24 போலி பல்கலைக்கழகங்கள்... பா.ஜ.க ஆளும் உ.பியில் மட்டும் 8' : பகீர் தகவலை வெளியிட்ட UGC!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில், 24 போலி பல்கலைக்கழகங்கள் இருப்பதாக யு.ஜி.சி தெரிவித்துள்ளது என்றும், இதில் அதிகமான பல்கலைக்கழகங்கள் உத்தர பிரதேசத்தில் இருப்பதாகவும் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்குத்தான் ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இந்த பதிலை அளித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், "நாடுமுழுவதும் 24 போலிப் பல்கலைக்கழகங்கள் இயங்கி வருவதை யு.ஜி.சி எனப்படும் பல்கலைக்கழக மானியக்குழு கண்டறிந்துள்ளது.

இந்தப் போலி பல்கலைக்கழகங்களில் அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் மட்டுமே 8 பல்கலைக்கழகங்கள் செயல்படுகின்றன. டெல்லியில் 7, ஒடிசா, மேற்குவங்கத்தில் 2 பல்கலைக்கழகமும், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, புதுச்சேரி, ஆந்திராவில் தலா ஒரு போலி பல்கலைக்கழகம் செயல்படுகிறது.

இந்த பல்கலைக்கழகங்கள் குறித்து நாளேடுகளில், யுஜிசி சார்பில் எச்சரிக்கை விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் போலிப் பல்கலைக்கழகங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதில் படிக்கும் மாணவர்களுக்குப் பட்டம் அளிக்கும் அதிகாரம் இல்லை. இந்த பல்கலைக்கழகத்தின் பெயர்களும் வெளியிடப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories