இந்தியா

பெகாசஸ் பயங்கரம் : எதிர்க்கட்சிகளின் அழுத்தத்திற்கு அஞ்சி கூட்டத்தொடரை முன்கூட்டியே முடிக்கும் மோடி அரசு?

எதிர்க்கட்சிகளின் வலுவான எதிர்ப்பால் நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஒன்றிய அரசு முன்கூட்டியே முடிக்க உள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது.

பெகாசஸ் பயங்கரம் : எதிர்க்கட்சிகளின் அழுத்தத்திற்கு அஞ்சி கூட்டத்தொடரை முன்கூட்டியே முடிக்கும் மோடி அரசு?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

டெல்லியில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரை ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை நடத்த ஒன்றிய அரசு திட்டமிட்டிருந்தது.

இந்நிலையில், கூட்டத் தொடர் துவங்குவதற்கு முதல் நாள் இரவு 'பெகாசஸ்' தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம் வெளிச்சத்திற்கு வந்து உலகையே அதிர்ச்சியடையச் செய்தது. உலகம் முழுவதும் உள்ள பத்திரிகையாளர்கள், அரசியல் கட்சித் தலைவர்களை இஸ்ரேல் நாட்டின் என்.எஸ்.ஓ நிறுவனம் உளவு பார்த்துவந்துள்ளது.

இந்தியாவிலும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்ட பலரின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்ட விவகாரம் சர்ச்சையானதை அடுத்து நாடாளுமன்றக் கூட்டம் துவங்கிய நாள் முதலே ஒட்டுக்கேட்பு குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாகக் குரல் எழுப்பி வருகின்றன.

மேலும் விவசாயிகள் போராட்டம், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு, கொரோனா பரவலைச் சரியாக கையாளாதது போன்ற பிரச்சனைகள் குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து குரல் எழுப்பி வருகின்றனர்.

பெகாசஸ் பயங்கரம் : எதிர்க்கட்சிகளின் அழுத்தத்திற்கு அஞ்சி கூட்டத்தொடரை முன்கூட்டியே முடிக்கும் மோடி அரசு?

குறிப்பாக பெகாசஸ் குறித்து நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தினந்தோறும் ஒத்திவைப்பு தீர்மானம் தொடர்பான நோட்டீசை அளித்து வருகிறார்கள். ஆனால் எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளுக்கு ஒன்றிய அரசு செவிசாய்க்காமல் விவாதிக்க மறுத்து வருகிறது.

இதனால், காங்கிரஸ் தலைமையில் தி.மு.க, சி.பி.எம் , சி.பி.ஐ, வி.சி.க உன நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து எதிர்க்கட்சி எம்.பிகளும் ஒன்றிணைந்து ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்கள்.

எதிர்க்கட்சிகளின் அழுத்தத்தால் ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை நடத்த திட்டமிட்டிருந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரை முன்கூட்டியே முடிப்பதற்கான முயற்சியில் ஒன்றிய அரசு ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது.

banner

Related Stories

Related Stories