மத்திய பிரதேச மாநிலம், அமர்கன்டக் பகுதியைச் சேர்ந்தவர் கஞ்சன் சாஹு. இவர் அதேபகுதியில் சமோசா கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த 22ம் தேதி இதே பகுதியைச் சேர்ந்த பஜ்ரு ஜெய்ஸ்வால் என்பவர் தனது நண்பர்களுடன் சமோசா வாங்கி சாப்பிட வந்துள்ளார்.
அப்போது, வழக்கமாக இரண்டு மசோசாவுக்கு ரூபாய் 15 என விற்றுவந்த கஞ்சன் சாஹு கூடுதலாக 5 ரூபாய் ஏற்றி 20 ரூபாய் என விற்றுள்ளார். இதனால் கடுப்பான ஜெய்ஸ்வால், கடை உரிமையாளர் கஞ்சன் சாஹுயிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் வாக்குவாதம் முற்றவே ஜெய்ஸ்வால் மீது கடை உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து போலிஸார் இருசரப்பை விசாரித்து வந்த நிலையில், ஆத்தித்தில் இருந்த ஜெய்ஸ்வால் மறுநாள் மீண்டும் கடைக்குச் சென்று, சமோசா கடைக்காரரிடம் சண்டையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது திடீரென ஜெய்ஸ்வால் அங்கிருந்த பெட்ரோலை எடுத்து உடலில் தானாக ஊற்றித் தீக்குளித்தார். இதைக் கண்ட அங்கிருந்தவர்கள் உடனே தீயை அணைத்து அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சையில் சேர்த்தனர். ஆனால் அங்குச் சிகிச்சை பலனின்றி ஜெய்ஸ்வால் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சமோசா விலை உயர்வால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.