இந்தியா

'வரப்போகும் புதிய ஆபத்து' : முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்ட புள்ளிவிபரத் தகவல்!

1991 நெருக்கடி காலகட்டத்தை விட நமது பாதையானது மிகவும் மோசமாக இருப்பதாக மன்மோகன் சிங் கவலை தெரிவித்துள்ளார்.

'வரப்போகும் புதிய ஆபத்து' : முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்ட புள்ளிவிபரத் தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் 1991ஆம் ஆண்டு கடுமையான பொருளாதார வீழ்ச்சி இருந்தது. அப்போது மன்மோகன் சிங்குக்கு நிதியமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதையடுத்து நாட்டின் பொருளாதாரத்தை மீட்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையால் இந்தியப் பொருளாதாரம் மீட்டெடுக்கப்பட்டது.

இந்நிலையில், பொருளாதார தாராளமயமாக்கலின 30ஆம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் விதமாகவும், 1991ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சாமாளித்தது குறித்தும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்ட அறிக்கை வருமாறு:

இந்தியாவில் 30 ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய தலைமையில் தாராளமயமாக்கல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதை இப்போது நான் நினைவுகூர்கிறேன். அப்போது என்னுடைய முதல் பட்ஜெட் உரையில் நான், விக்டர் ஹியூகோவின், "ஒரு சிந்தனைக்கான நேரம் வந்துவிட்டது என்றால் உலகின் எந்த ஒரு சக்தியாலும் அதைத் தடுக்க முடியாது" என்ற புகழ்பெற்ற தத்துவத்தை அவையில் முன்மொழிந்திருந்தேன்.

ஆனால், இன்று 30 வருடங்களுக்குப் பிறகு நாம் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கும்போது, நாம் இன்னும் வெகுதூரம் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்று நினைக்கிறன். பொருளாதார சீர்திருத்தங்களின் காரணமாக, கடந்த மூன்று தசாப்தங்களில் இந்தியாவின் மகத்தான பொருளாதார வளர்ச்சியைப் பெருமையுடன் திரும்பிப் பார்ப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.

ஆனால், கொரோனா தொற்றால் சமீபகாலமாக, நாம் சந்தித்துக் கொண்டிருக்கும் பாதிப்புகளின் காரணமாக இந்தியா மிகப்பெரிய பொருளாதார நெருக்கடிக்குத் தள்ளப்பட்டிருப்பதைக் கண்டு மிகவும் வருத்தமடைகிறேன். இன்று இந்தியாவின் பொருளாதாரம் 3 டிரில்லியன் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. ஆனால், இது நாம் மகிழ்ச்சி அடைவதற்கான நேரமல்ல. ஆராய்ந்து, சிந்தித்து, செயல்பட வேண்டிய நேரம்.

தற்போதைய பொருளாதார சூழலில், 1991 நெருக்கடி காலகட்டத்தை விடவும், வளர்ச்சியை நோக்கி முன்னேறும் நமது பாதையானது மிகவும் மோசமாக இருக்கிறது. ஒவ்வொரு இந்தியருக்கும் ஆரோக்கியமான மற்றும் கண்ணியமான வாழ்க்கை உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதற்கு, நம்முடைய முன்னுரிமைகள் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories