சீனாவில் முதன்முதலில் பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை இன்று புரட்டிப்போட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் இன்னும் மீளாத சூழல் நிலவி வருகிறது.
இத்தகைய நிலையில் சீனாவில் கொரோனா வைரஸ் தொடர்ச்சியாக பல்வேறு புதிய புதிய வைரஸ் பரவி வருகிறது. இதனால் அந்நாட்டு அரசு செய்வது அறியாது தவித்து வருகின்றனர். குறிப்பாக கொரோனா ஊரடங்கு காலத்தில் அதிக உயிரிழப்பு மற்றும் பாதிப்புகளை சந்தித்த சீனா தற்போது இயற்கை சீற்றத்திற்கு ஆளாகியுள்ளது.
இந்நிலையில், இதுவரை வரலாற்றில் இல்லாத அளவில் பெருமழையை எதிர்கொள்கிறது சீனா. சீனாவில் உள்ள பெரும்பாலான ஆற்றுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாகனங்களில் நிறுத்திவைக்கப்பட்ட பெரும்பால வாகனங்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
மெட்ரோ, பஸ் நிலையங்களில் கழுத்தளவு தண்ணீரில் சிக்கித் தவிக்கும் சீன மக்களின் வீடியோ மனதை பதைபதைக்கிறது. இதனால் அனைத்துச் சாலைகளும் துண்டிக்கப்பட்டுள்ளது. நகரின் முக்கிய பகுதிகள் தனித்தீவுகள் போல் காட்சியளிகிறது. அந்நாட்டு அரசு மீட்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியும் பெரும் பகுதி மக்களை இன்னும் முழுமையாக மீட்க முடியவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தற்போதுவரை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 25 பேர் பலியாகியுள்ளனர். ஹெனான் மாகாணம் மழை வெள்ளத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு நிலைமை தீவிரமாக இருப்பதாக அதிபர் ஜி ஜின்பிங் குறிப்பிட்டுள்ளார். அதேபோல், ஜெங்ஜோ மாகாணத்தில் மட்டும் 2 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுட்தப்பட்டுள்ளனர்.
ஓராண்டில் பெய்ய வேண்டிய சராசரி மழை அங்கு மூன்றே நாட்களில் பெய்துள்ளது என விஞ்ஞானிகள் கூறிவருகின்றனர். இந்த நிலைமையில் இருந்து சீனா மக்களை காப்பற்றவேண்டும் என உலகில் உள்ள பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.