இந்தியா

'அறுவை சிகிச்சைக்காக சேமித்த பணம்... கடித்துக் குதறிய எலிகள்': பணத்தை மாற்ற முடியாமல் தவிக்கும் வியாபாரி!

தெலங்கானாவில் அறுவை சிகிச்சைக்காகச் சேமித்த பணத்தை எலிகள் கடித்துக் குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'அறுவை சிகிச்சைக்காக சேமித்த பணம்... கடித்துக் குதறிய எலிகள்': பணத்தை மாற்ற முடியாமல் தவிக்கும் வியாபாரி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தெலங்கானா மாநிலம், மகபூப்பாபாத் மாவட்டம், இந்திரா நகர் தாண்டாவில் பகுதியைச் சேர்ந்தவர் ரெட்டி நாயக். இவர் இரு சக்கர வாகனத்தில் காய்கறிகளை விற்பனை செய்து வருகிறார். நான்கு வருடங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவை ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனைக்குச் சென்றுள்ளார் ரெட்டி நாயக்.

அப்போது அவரை பரிசோதித்தபோது வயிற்றில் கட்டி இருப்பது தெரியவந்தது. இந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற ரூபாய் நான்கு லட்சம் செலவாகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ரெட்டி நாயக் காய்கறி வியாபாரத்தில் கிடைக்கும் வருமானத்தில் 500 ரூபாயைத் தனியாக எடுத்து சிகிச்சைக்காக சிறுக சிறுக சேமித்து வந்துள்ளார்.

பின்னர் இரண்டு லட்சம் ரூபாய் சேமித்ததை அடுத்து மீதி இரண்டு லட்சத்திற்கு வீட்டைஅடமானம் வைத்துள்ளார். இதையடுத்து ரெட்டி நாயக் சேமித்துவைத்திருந்த பணத்தை அலமாரியிலிருந்து எடுத்தபோது அவருக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது.

சிறுக சிறுக சேமித்து வைத்திருந்த இரண்டு லட்சம் ரூபாயையும் எலிகள் கடித்துக் குதறியதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதனால் மன உடைந்துபோன ரெட்டி நாயக்கை அருகே இருந்தவர்கள் ஆறுதல் கூறி தேற்றினர்.

பின்னர், கிழிந்த நோட்டுகளை எடுத்துக் கொண்டு ரெட்டி நாயக் வங்கிக்குச் சென்றார். ஆனால் கிழிந்த நோட்டுகளை வங்கி ஊழியர்கள் வாங்க மறுத்துவிட்டனர். ஹைதராபாத்தில் உள்ள இந்தியன் ரிசர்வ் வங்கிக்கு எடுத்துச் செல்லுங்கள் அவர்கள் மாற்றி கொடுப்பார்கள் என வங்கி ஊழியர்கள் ரெட்டி நாயக்கிடம் கூறியுள்ளனர்.

அழுக்கடைந்த மற்றும் கிழிந்த நோட்டுகளை வங்கியில் மாற்றிக் கொள்ளலாம் என ஏற்கனவே இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது. ஆனால் எலி கடித்துக் கிழித்த நோட்டை வங்கி ஊழியர்கள் மாற்றிதர மறுத்தால் ரெட்டி நாயக் என்ன செய்து என்று தெரியாமல் இருக்கிறார்.

banner

Related Stories

Related Stories