இந்தியா

நீட், மேகதாது, விலை உயர்வு என 12 முக்கிய பிரச்னைகளை விவாதிக்க கேட்டு நாடாளுமன்றத்தில் திமுக நோட்டீஸ்!

12 முக்கிய பிரச்னைகளை எழுப்ப தி.மு.க நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் கொடுத்துள்ளது.

நீட், மேகதாது, விலை உயர்வு என 12 முக்கிய பிரச்னைகளை விவாதிக்க கேட்டு  நாடாளுமன்றத்தில் திமுக நோட்டீஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடாளுமன்றத்தில் நீட், மேகதாது, தடுப்பூசி, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, உள்ளிட்ட 12 முக்கியப் பிரச்னைகளை விவாதிக்க வேண்டுமென்று தி.மு.க நோட்டீஸ் கொடுத்துள்ளது.

நாளை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் மாலை 4 மணிக்கு அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது. நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையில் காலை 11 மணிக்கு அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது. அதில் திமுக மக்களவைக் குழு தலைவர் டி.ஆர் பாலு, மாநிலங்களவை திமுக குழு தலைவர் திருச்சி சிவா ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேகதாது அணை கட்டும் கர்நாடகா அரசின் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, தமிழ்நாட்டுக்கு தேவையான தடுபூசி வழங்க வேண்டும், கொரோனா காரணமாக ஏற்பட்டுள்ள கூடுதல் வேலை இழப்பு, பொருளாதார வீழ்ச்சி, அகில இந்திய மருத்துவ இடங்களில் ஓ.பி.சி இடஒதுக்கீடு, விவசாயிகள் பிரச்னை ஆகிய 12 முக்கிய பிரச்னைகள் குறித்து அவையை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும் என்று திமுக நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் கொடுத்துள்ளது.

இது தொடர்பாக நாளைய அனைத்துக்கட்சி கூட்டத்திலும் வலியுறுத்த உள்ளனர். பா.ஜ.க ஆட்சிக்கு வந்தது முதல் முக்கிய பிரச்னைகள் மீது அவையை ஒத்திவைத்து விவாதிக்க அனுமதிப்பதில்லை என்பதை நாளைய அனைத்துக்கட்சி கூட்டதில் எழுப்ப இருப்பதாக டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories