இந்தியா

இந்தியாவின் சிறந்த முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் தேர்வு : ‘Ormax Media' மக்கள் வாக்கெடுப்பில் முதலிடம்!

“ஆர்மாக்ஸ் மீடியா” அமைப்பின் வாக்கெடுப்பு நிகழ்ச்சியில் இந்தியாவின் சிறந்த முதலமைச்சராக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவின் சிறந்த முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் தேர்வு : ‘Ormax Media' மக்கள் வாக்கெடுப்பில் முதலிடம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மக்கள் வாக்களித்து தேர்வு செய்யும் சிறந்த முதலமைச்சருக்கான “ஆர்மாக்ஸ் மீடியா” அமைப்பின் வாக்கெடுப்பு நிகழ்ச்சியில் இந்தியாவின் சிறந்த முதலமைச்சராக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 68 சதவிகித வாக்குகள் பெற்று முதலாம் இடத்தில் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் 2வது இடம்பெற்றுள்ளார்.

மாதம் தோறும் வாக்கெடுப்பு நடத்தி சிறந்த முதலமைச்சரைத் தேர்ந்தெடுக்கும் ஆர்மாக்ஸ் நிறுவன வாக்கெடுப்பு, “யாரை நீங்கள் இந்தியாவின் சிறந்த முதலமைச்சராகக் கருதுகிறீர்கள்? கீழ்க்கண்ட படங்களில் “கிளிக்” செய்து வாக்களியுங்கள்” என்ற அறிவிப்புடன் வாக்கெடுப்பு நடத்துகிறது.

கடந்த (ஜூலை) 8 ஆம் தேதி நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் இந்தியாவின் தலைசிறந்த முதலமைச்சராக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் 2வது இடம் பிடித்துள்ளார். கடந்த மாதம் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் முதலிடம் பெற்றிருந்தார். ஆனால் இந்த மாதம், அவரைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதலிடம் பெற்றுள்ளார்.

“ஆர்மாக்ஸ் மீடியா” நிறுவனம் இந்தியாவின் சிறந்த முதலமைச்சருக்கான தங்கள் வாக்கெடுப்பு முடிவுகளை ஜூன்மாதத்தின் செயல்பாடுகளுக்காக நடத்தியுள்ளது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைசிறந்த முதலமைச்சராகத் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளார். கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இரண்டாவது இடத்தையும், ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் 3வது இடத்தையும், அசாம் முதலமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா 4வது இடத்தையும், மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி 5வது இடத்தையும் பெற்றுள்ளனர்.

இந்தியாவின் சிறந்த முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் தேர்வு : ‘Ormax Media' மக்கள் வாக்கெடுப்பில் முதலிடம்!

இந்த அறிக்கையின்படி இந்தியாவின்10 சிறந்த முதலமைச்சர்கள் பட்டியல்வருமாறு:

1. மு.க.ஸ்டாலின் (தமிழ்நாடு) : 68 சதவீதம். மே மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்குடன் 2-வது இடத்தில் இருந்தார். ஜூன்மாதத்திற்கான வாக்கெடுப்பில் 6 சதவிகிதம் உயர்ந்து முதலிடம் பெற்றுள்ளார்.

2. பினராயி விஜயன் (கேரளா) : 67 சதவிகிதம்.

3. நவீன்பட்நாயக் (ஒடிசா) : 63 சதவிகிதம்.

ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் ஏப்ரல் மாதத்துக்கான சிறந்த முதலமைச்சராகவும், மே மாதத்துக்கான வாக்கெடுப்பில் 2வது சிறந்த முதலமைச்சராகவும் இடம்பெற்றிருந்தார். ஜூன் மாதத்துக்கான வாக்கெடுப்பில் அவர் மூன்றாம் இடத்தில் இருக்கிறார். நவீன் பட்நாயக் ஒடிசாவில் 5வது முறை முதலமைச்சராகியுள்ளார்.

4. ஹிமந்தா பிஸ்வா சர்மா (அசாம்) : 60 சதவிகிதம் - 2 சதவிகிதம் உயர்வு. அசாம் மாநில முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் இப்பட்டியலில் இடம்பெற்ற இவர், கடந்த மே மாதத்திற்கான வாக்கெடுப்பில் 3வது இடத்தையும் ஜூன் மாதத்திற்கான வாக்கெடுப்பில் 4வது இடத்தையும் பெற்றுள்ளார்.

5. மம்தா பானர்ஜி (மேற்கு வங்காளம்) : 58 சதவிகிதம். தொடர்ந்து மூன்றாவது முறையாக மேற்குவங்காள முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள இவர், 10 ஆண்டு காலம் ஆட்சிக்கு எதிரான உணர்வுகள் இருந்தபோதிலும் திரிணாமுல் காங்கிரஸ் வங்காளத்தில் 200க்கு மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. கடந்த மாதம் 4வது இடம் பெற்றிருந்த இவர், இந்த மாதம் 5வது இடத்தைப்பெற்றுள்ளார்

6. யோகி ஆதித்யநாத் (உத்தரப்பிரதேசம்) : 54 சதவிகிதம். கடந்த 5 மாதங்களாக நடைபெற்று வந்த வாக்கெடுப்பில் உ.பி. முதலமைச்சர் ஏப்ரல் மாதத்தில் முதல் இடம் பெற்றிருந்த இவருடைய செல்வாக்கு மே மாதத்தில் 7 சதவிகிதம் சரிந்தது. ஆனால் ஜூன் மாதத்துக்கான வாக்கெடுப்பில் 8 சதவிகிதம் உயர்ந்து 6வது இடம் பிடித்துள்ளார்.

7. அர்விந்த் கெஜ்ரிவால் (டெல்லி) : 52 சதவிகிதம். டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவாலின் அங்கீகரிக்கப்பட்ட செல்வாக்குநிலை மே மாதம் 44 சதவிகிதமாக இருந்தது. ஆனால் இந்த (ஜூன்) மாதம் அவர் 8 சதவிகிதம் அதிகம் பெற்றுள்ளார். 5 சதவிகிதத்துடன் அவர் 7வது இடத்தில் இருக்கிறார்.

8. ஷிவ்ராஜ் சவுகான் (மத்தியப் பிரதேசம்): 51 சதவிகிதம். ஜனவரி மாதம் உ.பி. முதலமைச்சருடன் முதல் இடத்தில் இருந்த சவுகான் ஏப்ரல் மாதத்தில் அதை இழந்தார். மே மாதம் மேலும் 6 சதவிகிதம் சரிந்து 12வது இடத்திற்கு இறங்கினார். ஆனால் இந்த ஜூன் மாதம் செல்வாக்கு 9 சதவிகிதம் 8 ஆம் இடத்தில் இருக்கிறார்.

8. ஜெய்ராம் தாகூர் (இமாசலப்பிரதேசம்): ஜனவரி மாதம் இந்தப் பட்டியலில் இடம்பெற்ற இவர் கடந்த மாதம் 6வது இடத்தில் இருந்தார். இந்த மாதம் செல்வாக்கு உயர்ந்தபோதிலும் தரவரிசையில் 6ஆம்இடத்திலிருந்து 8 ஆம் இடத்திற்கு இறங்கிவிட்டார்.

9. உத்தவ் தாக்கரே (மகாராஷ்டிரா) : 47 சதவிகிதம். ஏப்ரல் மாதம் 5வது இடத்தில் இருந்த உத்தவ் தாக்கரே கடந்த மாதம் 8வது இடத்துக்கு இறங்கி; இந்த மாதம் 9வது இடத்துக்கு மேலும் இறங்கிவிட்டார். எனினும் இவரது செல்வாக்கு 2 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

9. ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி (ஆந்திரப் பிரதேசம்) : 47 சதவிகிதம். மே மாதம் 4வது இடத்தில் இருந்த ஜெகன் மோகன் ரெட்டியின் செல்வாக்கு 10 சதவிகிதம் சரிந்ததால் இந்த மாதம் 9வதுஇடத்துக்கு இறங்கிவிட்டார்.

10. பிரமோத் சாவந்த் (கோவா) :47 சதவிகிதம். ஜனவரி மாதம் 7வது இடத்தில் இருந்த இவர் தெலுங்கானா, கர்நாடக முதல்வர்களுடன் அந்த இடத்தைப் பகிர்ந்து கொண்டார். 7 சதவிகித செல்வாக்கு சரிந்ததால் இவர் மே மாதம் 10வது இடத்தில் இருந்தார். 4 சதவிகிதம் செல்வாக்கு அதிகரித்ததால் இந்த (ஜூன்) மாதம் 9வது இடம்பெற்றுள்ளார்.

banner

Related Stories

Related Stories