இந்தியா

"தடுப்பூசி விஷயத்தில் ஒன்றிய அரசு அரசியல்தான் செய்கிறது" : மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக் பதிலடி!

தடுப்பூசி விஷயத்தில் அரசியல்தான் நடக்கிறது என மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக் குற்றம்சாட்டியுள்ளார்.

"தடுப்பூசி விஷயத்தில் ஒன்றிய அரசு அரசியல்தான் செய்கிறது" :  மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக் பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பேரழிவை ஏற்படுத்தியதை அடுத்து, மக்களுக்குத் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் இந்தியாவை மூன்றாவது அலை தாக்கும் என்றும், அதற்குள் மக்களுக்கு தடுப்பூசிகளை செலுத்தி காக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது.

இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. ஒன்றிய பா.ஜ.க அரசு தடுப்பூசிகளை போதுமான அளவுக்குக் கொள்முதல் செய்யாததால் பல மாநிலங்களில் தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வமாக இருக்கும் நிலையில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை இருப்பதாக மாநில அரசுகள் கூறிவருகின்றனர்.

இந்நிலையில், தடுப்பூசிகளில் அரசியல் செய்ய வேண்டாம் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. ஆனால் ஒன்றிய அரசு தடுப்பூசி செலுத்தும் விஷயத்தில் அரசியல்தான் செய்கிறது என மகாராஷ்டிரா மாநில அமைச்சர் நவாப் மாலிக் பதிலடி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் நவாப் மாலிக் கூறுகையில், "மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வரும்போது பற்றாக்குறை ஏற்படுவது கவலையை அளிக்கிறது. இந்த விஷயத்தில் மத்திய அரசு கவனத்துடன் இருக்க வேண்டும். தடுப்பூசியில் அரசியல் செய்யவில்லை என ஒன்றிய அமைச்சர்கள் கூறுகின்றனர். ஆனால் உண்மையில் அது தான் நடக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories