மத்திய பிரதேச மாநிலம், அலிராஜ்பூரில் பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் இளம் பெண் ஒருவரை மரத்தில் கட்டி தொங்கவிட்டு கொடூரமாகத் தாக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் பரவியது.
அந்த வீடியோவில், இளம் பெண்ணின் தந்தை மற்றும் மூன்று சகோதரர்கள் சேர்ந்து அந்த பெண்ணை இறக்கமின்றி அடித்து சித்திரவதை செய்கிறார்கள். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து போலிஸார், பழங்குடியினர் கிராமத்திற்குச் சென்று அந்த இளம் பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்தனர்.
இதையடுத்து இளம் பெண் கொடுத்த புகாரின் பெயரில் போலிஸார் தந்தை மற்றும் சகோதரர்களைக் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.
இந்நிலையில், அந்த பெண் மாமியார் வீட்டை விட்டு வெளியேறி பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது இதை கண்டித்து தந்தை மற்றும் சகோதரர்கள் இளம் பெண்ணை தாக்கியதாகக் கூறப்படுகிறது.
மத்திய பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சியில் வந்ததில் இருந்தே தொடர்சியாக பெண்கள் மீதான தாக்குதல்கள் அதிரித்து வருகிறது. மேலும் குற்ற சம்பவங்களும் அதிரித்துள்ளது. இவற்றை எல்லாம் தடுக்காமல் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் வேடிக்கை பார்த்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.