இந்தியா

“டெல்டா பிளஸ் வைரஸ் தீவிர பாதிப்பை ஏற்படுத்துமா?” : ஒன்றிய அரசின் நிதி ஆயோக் நிர்வாகி சொல்வது என்ன?

நாட்டில் கண்டறியப்பட்டுள்ள டெல்டா பிளஸ் வைரஸ் தீவிர பாதிப்பை ஏற்படுத்துமா என்பதை இப்போது கூற முடியாது என வி.கே. பால் தெரிவித்துள்ளார்.

“டெல்டா பிளஸ் வைரஸ் தீவிர பாதிப்பை ஏற்படுத்துமா?” : ஒன்றிய அரசின் நிதி ஆயோக் நிர்வாகி சொல்வது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் உருமாற்றம் அடைந்த டெல்டா பிளஸ் வைரஸ் நாட்டின் 11 மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 10 பேருக்கு டெல்டா பிளஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் மூன்றாவது அலை இந்தியாவை தாக்குவதற்கான சாத்தியக்கூறு இருப்பதாக விஞ்ஞானிகளும், மருத்துவர்களும் எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள். உருமாற்றம் அடைந்த டெல்டா பிளஸ் வைரஸ்தான் கொரோனா மூன்றாவது அலையை உருவாக்குமோ என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. மேலும் இது எப்படியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்நிலையில், டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் வேகமாக பரவுமா அல்லது தீவிர பாதிப்புகளை ஏற்படுத்துமா என்பதை இப்போதைக்கு கூற முடியாது என நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.

“டெல்டா பிளஸ் வைரஸ் தீவிர பாதிப்பை ஏற்படுத்துமா?” : ஒன்றிய அரசின் நிதி ஆயோக் நிர்வாகி சொல்வது என்ன?

இது குறித்து வி.கே.பால் கூறுகையில், கொரோனா மூன்றாவது அலை எப்போது ஏற்படும் என்பதை கூற முடியாது. புதிய அலை உருவாவதும் உருவாகாமல் இருப்பதும் நம் கைகளில் உள்ளது. உருமாறிய டெல்டா பிளஸ் என்ற புதிய வகை வைரஸ் தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

நாடுமுழுவதும் 11 மாநிலங்களில் டெல்டா பிளஸ் வைரஸ் பரவல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்த டெல்டா பிளஸ் வைரஸ் வேகமாக பரவும் தன்மை உடையதா தீவிர பாதிப்புகளை ஏற்படுத்துமா என்பதை இப்போதே கூற முடியாது” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories