உத்தர பிரதேச மாநிலத்தில், முகக்கவசம் அணியாமல் வங்கிக்கு வந்த வாடிக்கையாளரை, காவலாளி துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம், பரோலி மாவட்டத்தில் பாங்க் ஆஃப் பரோடா வங்கிக் கிளை உள்ளது. இந்த வங்கியின் வாடிக்கையாளரான ரயில்வே ஊழியர் ராஜேஷ் குமார் முகக்கவசம் அணியாமல் வந்துள்ளார். அப்போது வங்கியின் நுழைவு வாயிலில் நின்றிருந்த காவலாளி கேசவ் மிஷ்ரா, முகக்கவசம் அணியாமல், உள்ளே செல்லக்கூடாது என கூறியுள்ளார்.
இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் எற்பட்டுள்ளது. வாக்குவாதம் தீவிரமடைந்ததால், ஆந்திரமடைந்த காவலாளி, ராஜேஷ் குமாரின் காலில் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து துடித்துள்ளார். அப்போது அருகே இருந்த மனைவி, ஏன் அவரை சுட்டுக் கொன்றீர்கள் என கூச்சலிட்டுக் கதறுகிறார்.
இந்த சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட, தற்போது இது வைரலாகி வருகிறது. இது பற்றி அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் ராஜேஷ் குமாரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் போலிஸார் காவலாளியை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து ராஜேஷ் குமாரின் உறவினர் ஒருவர் கூறுகையில், அவர் வங்கியில் நுழைய முயன்றபோது காவலர் முகக்கவம் அணியச் சென்னார். பின்னர் அவர் திரும்பிச் சென்று முகக்கவசம் அணிந்து வந்தார்.
ஆனால், காவலாளி அவரை வங்கியின் உள்ளே அனுமதிக்கவில்லை. இது மதிய உணவு இடைவேலை பிறகு வாங்க என சொன்னார். இதனால் ஒருவருக்கும் வாக்குவாம் எற்பட்டது. அப்போது காவலாளி அவரை தள்ளிவிட்டு அவர் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டுவிட்டார்" என வேதனையுடன் கூறினார்.
மேலும் வங்கியில் இருந்த ஊழியர்களிடமும் போலிஸார் விசாரணை நடத்தினர். காவலாளி, முகக்கவசம் அணியாததால்தான் சுட்டாரா அல்லது வேறு காரணங்கள் இருக்கிறதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக பரேலி காவல்துறைத் தலைவர் ரோஹித் சிங் சஜ்வான் தெரிவித்துள்ளார்.