இந்தியா

ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழில் நடிகையின் புகைப்படம்.. மாணவர் அதிர்ச்சி.. நிதிஷ் ஆட்சியில் அவலம்!

ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழில், மலையாள நடிகையின் படம் இடம்பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழில் நடிகையின் புகைப்படம்.. மாணவர் அதிர்ச்சி.. நிதிஷ் ஆட்சியில் அவலம்!
Lenovo
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பீகார் மாநிலத்தில் எட்டு வருடங்கள் கழித்து ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தகுதித் தேர்வு கடந்த 2019ம் ஆண்டு 317 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் மார்ச் 12ம் தேதி வெளியிடப்பட்டன. ஆனால், உருது, சமஸ்கிருதம் மற்றும் அறிவியல் ஆகிய மூன்று பாடங்களுக்கான தேர்வு முடிவுகள் மட்டும் வெளியிடப்படாமல் இருந்தது.

இந்நிலையில், நிறுத்திவைக்கப்பட்டிருந்த பாடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் ஒரு மாணவரின் சான்றிதழில் நடிகையின் புகைப்படம் இடம்பெற்றிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ரஷிகேஷ் குமார் என்ற மாணவர் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியுள்ளார். இதில் உருது, சமஸ்கிருதம், அறிவியல் பாடங்களில் முதல் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இதற்கான சான்றிதழ்களை இணையத்தில் பதிவிறக்கம் செய்துள்ளார். அப்போது தனது புகைப்படத்திற்கு பதிலாக மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரன் புகைப்படம் இருந்தைக் கண்டு அந்த மாணவர் அதிர்ச்சியடைந்துள்ளார். தற்போது இந்த சான்றிதழ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பீகார் மாநிலத்தில் இப்படி நடப்பது இது ஒன்றும் முதல் முறை கிடையாது. ஏற்கனவே கடந்த 2019ம் ஆண்டு வெளியான பீகார் பொது சுகாதார பொறியியல் துறையின் தகுதிப் பட்டியலில் இந்தி நடிகை சன்னி லியோனின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. தொடர்ச்சியாக கல்வித்துறை சார்ந்த சான்றிதழ்களில் நடிகைகளின் புகைப்படம் இடம்பெறுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழில் நடிகையின் புகைப்படம்.. மாணவர் அதிர்ச்சி.. நிதிஷ் ஆட்சியில் அவலம்!

இந்நிலையில், ஆர்.ஜே.டி தலைவர் தேஜஷ்வி யாதவ், "பொறியியல் தகுதி தேர்வில் சன்னி லியோன் முதலிடம் பிடித்தார். இப்போது அனுபமா பரமேஸ்வரன் மாநில தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இப்படி ஒவ்வொரு தேர்விலும் நிதிஷ்குமார் அரசு மோசடி செய்வதால் லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது" என பா.ஜ.க ஆதரவுடன் ஆட்சி செய்து வரும் நிதிஷ்குமார் அரசை விமர்சித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories