இந்தியா

"டெல்லிக்கு சென்று மன்னிப்பு கேட்டு வேறு வேலை பாருங்க" : ஆளுநர் தன்கர் கருத்துக்கு மஹுவா மொய்த்ரா பதில்!

மேற்குவங்க ஆளுநரை, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹூவா மொய்த்ரா விமர்சித்துள்ளார்.

"டெல்லிக்கு சென்று மன்னிப்பு கேட்டு வேறு வேலை பாருங்க" : ஆளுநர் தன்கர் கருத்துக்கு மஹுவா மொய்த்ரா பதில்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மேற்கு வங்கத் தேர்தலில் வெற்றிபெற முடியாத ஆத்திரத்தில் அம்மாநில அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் போக்கை மோடி தலைமையிலான ஒன்றிய அரசு, தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில் கூட அம்மாநிலத் தலைமைச் செயலாளரை ஒன்றிய அரசு திரும்பப் பெறக் கோரியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து முதல்வர் மம்தா பானர்ஜி தலைமைச் செயளாளரை அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு முதல்வரின் ஆலோசகராக நியமித்து, மிஸ்டர் மன்கி பாத் பிரதமரே என் கதையை முடிக்கப் பார்க்கிறீர்களா, அது உங்களால் முடியாது என மோடிக்கு சவால் விடுத்தார்.

தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து மாநில ஆளுநர் ஜக்தீப் தன்கர் பா.ஜ.கவுக்கு சாதகமாக இருந்து வருகிறார் என முதலமைச்சர் மம்தா தொடர்ந்து குற்றம்சாட்டிவருகிறார். இந்நிலையில் ஆளுநர் நேற்று அரசை விமர்சிக்கும் வகையில் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அதில், மேற்குவங்க மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் கவலைக்குரியதாக இருக்கிறது என்றும் காவல்துறையினரும் பழிவாங்கும் அரசியலுக்கு உடந்தையாக இருப்பதாகவும் விமர்சித்திருந்தார்.

ஆளுநரின் இந்த அறிக்கைக்கு, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹூவா மொய்த்ரா, “அங்கிள் ஜி... வேறு வேலை தேடுங்கள்” என திலளித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், "அங்கிள் ஜி, மேற்குவங்கத்தின் இந்த இக்கட்டான நிலை மேம்படவேண்டும் என்றால் நீங்கள் டெல்லிக்கு சென்று மன்னிப்பு கேட்டுவிட்டு வேறு வேலை தேடிக் கொள்ள வேண்டும்' எனப் பதிவிட்டுள்ளார்.

மேலும் மற்றொரு ட்வீட்டில், ஆளுநர் மாளிகையில் குடும்ப உறுப்பினர்களைச் சிறப்பு அதிகாரிகளாக நியமித்திருப்பதாகக் குற்றம் சுமத்தியிருப்பதுடன், அவர்களின் பெயர், பணி விவரம் மற்றும் ஆளுநருடனான உறவு குறித்த பட்டியலையும் இணைத்துள்ளார். இதற்கு ஆளுநர் தன்கர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories