இந்தியா

“வேலை நிறுத்தம் சட்டவிரோதமா?” : நீதிமன்ற கருத்துக்கு எதிர்ப்பு.. ம.பி-யில் 3,000 மருத்துவர்கள் ராஜினாமா!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் 3000 அரசு மருத்துவர்கள் திடீரென ராஜினாமா செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“வேலை நிறுத்தம் சட்டவிரோதமா?” : நீதிமன்ற கருத்துக்கு எதிர்ப்பு.. ம.பி-யில் 3,000 மருத்துவர்கள் ராஜினாமா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா தொற்றிலிருந்து மக்களைக் காப்பாற்ற நாடு முழுவதும் மருத்துவர்கள் தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றி வருகிறார்கள். இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையில் மட்டும் தொற்று பாதித்து 594 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்.

மேலும் கொரோனா வைரஸ் பரவ துவங்கியதிலிருந்தே மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் பன்மடங்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது. தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநில அரசுகள் மருத்துவர்களுக்காக சில திட்டங்களை அறிவித்துள்ளது.

இந்நிலையில், மத்திய பிரதேச மாநில மருத்துவர்கள், உதவித்தொகை உயர்வு, கொரோனாவல் பாதிக்கப்பட்டால் தங்களுக்கும், தங்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்களை வலியுறுத்தி நான்கு நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், மருத்துவர்களின் போராட்டம் தொடர்பாக அம்மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முகமது ரபிக் அகமது மற்றும் நீதிபதி சுஜோய் பால் ஆகியோர், அடுத்த 24 மணி நேரத்திற்குள் மருத்துவர்கள் மீண்டும் பணியில் சேர வேண்டும் என்றும் பணியில் சேர வில்லை என்றால் மாநில அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

“வேலை நிறுத்தம் சட்டவிரோதமா?” : நீதிமன்ற கருத்துக்கு எதிர்ப்பு.. ம.பி-யில் 3,000 மருத்துவர்கள் ராஜினாமா!

மேலும், வேலைநிறுத்தம் என்பது சட்டவிரோதமானது என்று நீதிபதிகள் தங்களின் தீர்ப்பின் போது குறிப்பிட்டு பேசியுள்ளனர். இதையடுத்து நீதிபதிகளின் இந்த கருத்திற்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து 3 ஆயிரம் ஜுனியர் மருத்துவர்கள், தங்களது வேலையை ராஜினாமா செய்துள்ளனர்.

இது குறித்து மத்திய ஜுனியர் மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் அவிந்த் மீனா கூறுகையில், “அரசு அதிகாரிகள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தனர். ஆனால் அதற்குப் பிறகு எதுவும் நடக்கவில்லை. அதனால் தான் நாங்கள் வேலை நிறுத்ததில் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

தங்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை வேலைநிறுத்தம் தொடரும் என்றார். உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும். மருத்துவ அதிகாரிகள் சங்கம் மற்றும் குடியுரிமை மருத்துவர்கள் சங்கத்தின் உறுப்பினர்களும் போராட்டத்தில் பங்கேற்பார்கள்” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories