உத்தரப் பிரதேசத்தின் மீரட் நகரிலுள்ள சவுத்ரி சரண் சிங் பல்கலைக்கழக தத்துவப் பாடப்பிரிவில் ஏற்கெனவே முதல்வர் ஆதித்யநாத் மற்றும் ராம்தேவின் புத்தகங்கள் சேர்க்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில், புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும் குழுவின் பரிந்துரை அடிப்படையில், உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளிலும் முதல்வர் ஆதித்யநாத்தின் ‘ஹத்தியோகா கா ஸ்வரூப் வா சாத்னா’ மற்றும் பாபாராம்தேவின் ‘யோக் சாத்னா வா யோக் சிக்கிட்சா ரஹஸ்யா’ ஆகிய புத்தகங்கள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
இதன்படி இளங்கலை தத்துவம் படிக்கும் மாணவர்கள் இனிமேல் தங்களின் இரண்டாவது செமஸ்டரில் ஆதித்யநாத், ராம்தேவின் புத்தகங்களை படித்து தேர்வெழுத வேண்டும் என தெரிவிக்கப்பட்டள்ளது. அறிவியலுக்கு எதிராக மூடநம்பிக்கை கருத்தை பரப்பி வரும் ஆதித்யநாத், ராம்தேவை மாணவர்கள் படிக்கும் பாடபுத்தகத்தில் சேர்பதா என பலரும் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.