இந்தியா

“இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் 186 யானைகள் ரயில் மோதி உயிரிழப்பு” : RTI-ல் வெளியான அதிர்ச்சி தகவல்!

இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் 186 யானைகள் ரயில் மோதி உயிரிழந்தாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

“இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் 186 யானைகள் ரயில் மோதி உயிரிழப்பு” : RTI-ல் வெளியான அதிர்ச்சி தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கம்பீரத் தோற்றத்துடன் கூட்டமாக வாழக்கூடிய யானைகள் காடுகளின் பாதுகாவலன் என போற்றப்படுகிறது. நாள்தோறும் உணவு மற்றும் தண்ணீர் தேடி யானைகள் தனது வலசுப் பாதையில் பல கிலோ மீட்டர் தூரம் வனப்பகுதி நடந்து சென்று ஒரு பகுதியில் இருக்கும் விதையை மற்ற பகுதிக்கு பரப்புவதில் மிகப்பெரிய பங்கு யானைகளுக்கு உள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டில் தேசிய அளவில் நடந்த யானைகள் கணக்கெடுப்பில் நாடு முழுவதும் 27 ஆயிரத்து 212 யானைகள் இருந்தன. அவற்றில் 10% யானைகள், அதாவது 2,761 யானைகள் தமிழகத்தில் இருப்பது கணக்கெடுப்பில் தெரிய வந்தது. தமிழகத்தில் 4 புலிகள் காப்பகங்கள் ஒன்பது வனக்கோட்டங்கள், 4 வன உயிரின சரணாலயங்களில் யானைகள் பரவலாக வாழ்கின்றன.

யானைகளின் வாழ்விட பரப்பு குறைவது, உணவுப் பற்றாக்குறை, நீர் மாசு, பூச்சிக்கொல்லிகள், சட்டவிரோத மின் வேலிகள், வேட்டை, ரயில் மற்றும் வாகன விபத்துகள், விவசாய பயிர்களை காக்க விவசாயிகள் கையாளும் தவறான உத்திகள் போன்றவற்றால் யானைகள் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.

“இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் 186 யானைகள் ரயில் மோதி உயிரிழப்பு” : RTI-ல் வெளியான அதிர்ச்சி தகவல்!

அதேபோல் காட்டு யானைகள் தாக்கி உயிரிழக்கும் மனிதர்களின் எண்ணிக்கையும் இதற்கு இணையாக உயர்ந்து வருகிறது. கொரோனா ஊரடங்கு காலத்தில் காட்டு யானைகள் தாக்கி மனிதர்கள் உயிரிழப்பது குறைந்துள்ளது.

ஆனால், யானைகள் உயிரிழப்பு தமிழகத்தில் அதிகரித்துள்ளது. குறிப்பாக கோவை, சத்தியமங்கலம், நீலகிரி, கிருஷ்ணகிரி போன்ற பகுதிகளில் உள்ள வனப்பகுதி மற்றும் கிராமப்பகுதிகளில் யானைகள் உயிரிழப்பு அடிக்கடி நிகழ்ந்து வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் ரயில் மோதி 561 யானைகள் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை சார்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், ரயில் மோதி யானைகள் உயிரிழப்பது தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் துறையிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பி இருந்தார்.

அதற்கு வனத்துறை சார்பில் அளிக்கப்பட்ட பதிலில், “கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் 186 யானைகள் ரயில் மோதி உயிரிழந்து உள்ளது. அதிகபட்சமாக அசாமில் 62 யானைகள் உயிரிழந்துள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் யானைகளைப் பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories