இந்தியா

கொரோனா பாதித்தவர்களை தாக்கும் ‘கருப்பு பூஞ்சை’ தொற்று.. மகாராஷ்டிராவில் 1000 பேர் பாதிப்பு.. 52 பேர் பலி!

மகாராஷ்டிராவில் 52 பேர் கருப்பு பூஞ்சை தொற்றுக்கு பலியாகியுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா பாதித்தவர்களை தாக்கும் ‘கருப்பு பூஞ்சை’ தொற்று.. மகாராஷ்டிராவில் 1000 பேர் பாதிப்பு.. 52 பேர் பலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா தொற்றால் மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு வரும் நிலையில், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் மியூகோர்மைக்கோசிஸ் எனும் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டு வருவது மக்களை அச்சமடையச் செய்துள்ளது.

இந்நிலையில்,மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் கருப்பு பூஞ்சை நோய்க்கு 52 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த பூஞ்சை நோயால் கடந்த ஆண்டு ஒரு சிலர் மட்டுமே பலியான நிலையில், இந்த ஆண்டில் அதிகமானோர் இந்நோயால் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ, "மாநிலம் முழுவதும் சுமார் 1,500 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் 1 லட்சம் அம்போட்டெரிசின் - பி பூஞ்சை எதிர்ப்பு மருந்து வாங்க டெண்டர் கோரப்படும்" எனக் கூறியுள்ளார்.

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் அல்லது கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் அதிகப்படியான ஸ்டீராய்டு மருந்துகள் எடுத்துக்கொண்டதன் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து கருப்பு பூஞ்சை என்ற நோய் அவர்களை தாக்குவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மேலும், தலைவலி, காய்ச்சல், சைனஸ் மண்டலத்தில் பாதிப்பு, கண்களுக்கு கீழ் வலி மற்றும் பகுதியளவில் பார்வை குறைபாடு ஏற்படுவது போன்றவை இந்த பூஞ்சை பாதிப்புக்கு முக்கிய அறிகுறி என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

“மியூகோர்மைக்கோசிஸ் எனும் கருப்பு பூஞ்சைத் தொற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோரை அதிகளவில் தாக்கியுள்ளது. இத்தொற்றால் கண் பார்வையை இழக்கும் சூழல் ஏற்படுவதோடு, நுரையீரலையும் பாதிக்கும்” என டெல்லி எய்ம்ஸ் இயக்குனர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories