இந்தியா

'மோடியும், அமித்ஷாவும் வெல்ல முடியாதவர்கள் ஒன்றும் அல்ல' : தேர்தல் முடிவைச் சுட்டிக்காட்டும் சிவசேனா!

மோடியும், அமித்ஷாவும் வெல்ல முடியாதவர்கள் அல்ல என சிவசேனா கருத்து தெரிவித்துள்ளது.

'மோடியும், அமித்ஷாவும் வெல்ல முடியாதவர்கள் ஒன்றும் அல்ல' : தேர்தல் முடிவைச் சுட்டிக்காட்டும் சிவசேனா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 213 தொகுதிகளைப் பிடித்து தனிப்பெரும்பான்மையுடன் மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கிறது. மோடி, அமித்ஷா ஆகியோர் ஓடி ஓடி பிரச்சாரம் செய்த போதும் பா.ஜ.கவால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. 77 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.

அதேபோல் கேரளாவில் ஒரு இடத்தில் கூட பா.ஜ.க வெற்றி பெறவில்லை. மேலும் தமிழ்நாட்டில் கூட பா.ஜ.க போட்டியிட்ட 20 தொகுதிகளில் 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. நடந்து முடிந்துள்ள ஐந்து மாநில தேர்தலில் அசாமை தவிர்த்து மற்ற மாநிலங்களில் பா.ஜ.கவால் பெரிய அளவில் வெற்றி பெற முடியவில்லை.

இந்நிலையில், மேற்குவங்க தேர்தல் முடிவுகளை சுட்டிக்காட்டி மோடி, அமித்ஷா ஒன்றும் வெல்ல முடியாதவர்கள் அல்ல என சிவசேனா கருத்து தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சிவசேனாவின் சாம்னா பத்திரிகையில் எழுதப்பட்டுள்ள தலையங்கத்தில், "பொங்கி எழுந்த கொரோனா நோயை கையாளும் பணியை ஓரம் கட்டி வைத்துவிட்டு பிரதமர் மோடி உள்பட அனைத்து மத்திய அமைச்சர்களும் மேற்கு வங்க தேர்தலில் மம்தா பானர்ஜியை தோற்கடிக்க மும்முரமாக வேலை செய்தனர். இருப்பினும் பா.ஜகவின் சவால்களையும் எதிர்கொண்ட மம்தா பானர்ஜி தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி கண்டுள்ளார்.

அனைத்து அரசு எந்திரங்களும், பண பலமும், தொழில்நுட்பங்களும் தங்களது வசம் இருந்தாலும், பிரதமர் மோடியும், உள்துறை மந்திரி அமித்ஷாவும் வெல்ல முடியாதவர்கள் அல்ல என்பதை இந்த தேர்தல் முடிவு நிரூபித்துள்ளது. மேலும் மேற்கு வங்கத் தேர்தலில் பா.ஜ.க தோல்வி அடைவதற்கான முக்கியக் கராணங்களில் ஒன்று பா.ஜ.கவின் அகங்காரம், ஆணவப் போக்குதான்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories