இந்தியா

“தந்தையை ஊசிபோட்டு கொன்றுவிடுங்கள்”: படுக்கை வசதி கிடைக்காமல் காத்திருந்த மகன் - நெஞ்சை உலுக்கும் வீடியோ!

மஹாராஷ்டிராவில் சிகிச்சைக்காக காத்திருக்கும் ஒருவரின் மகன், “படுக்கையைத் தாருங்கள் இல்லையெனில் தந்தையைக் கொன்றுவிடுங்கள்” என கதறிய அழுத காட்சி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

“தந்தையை ஊசிபோட்டு கொன்றுவிடுங்கள்”: படுக்கை வசதி கிடைக்காமல் காத்திருந்த மகன் - நெஞ்சை உலுக்கும் வீடியோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நாடுமுழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸைக் கட்டுப்படும் நோக்கில் சுகாதாரத்துறை பல்வேறு கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதேவேளையில், நாடுமுழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் முடுக்கிவிட்டப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறி வருகிறது.

ஆனால் மகாராஷ்டிரா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அம்மாநில அரசுகள் குற்றம்சாட்டி வருகின்றன. அதிலும் குறிப்பாக மகாராஷ்டிராவில் கொரோனா நோயாளிகள் மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள், வெண்ட்டிலேட்டர்கள், ஆக்சிஜன் வசதிகள் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

இந்நிலையைச் சமாளிக்க முடியாமலும், மத்திய அரசின் உதவி கிடைக்காமலும் திணறி வருகிறது அம்மாநில அரசு. இந்த சூழலில், சிகிச்சைக்காக காத்திருக்கும் ஒருவரின் மகன், “படுக்கையைத் தாருங்கள் இல்லையெனில் தந்தையைக் கொன்றுவிடுங்கள்” என கதறிய அழுத காட்சி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

“தந்தையை ஊசிபோட்டு கொன்றுவிடுங்கள்”: படுக்கை வசதி கிடைக்காமல் காத்திருந்த மகன் - நெஞ்சை உலுக்கும் வீடியோ!

மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் சாகர் கிஷோர் நஹர்ஷெடிவர். இவரின் தந்தைக்கு கொரோனா பாதிக்கப்பட்டு மோசமான நிலையில் இருந்துவருகிறார். இந்நிலையில் சாகர் கிஷார் தனது தந்தையை மருத்துவமனையில் அனுமதிக்க முயன்றுள்ளார்.

ஆனால் பல மருத்துவமனைக்கு அழைந்து திரிந்தும், படுக்கை வசதிகள் கிடைக்கவில்லை. இதனையடுத்து தெலுங்கானா மாநிலத்திற்குச் சென்று அங்கு மருத்துவமனையில் சேர்க்க முயன்றும் எங்கும் அனுமதி கிடைக்கவில்லை.

சுமார் 24 மணி நேரத்தில் மஹாராஷ்டிரா, தெலுங்கானா என்ற இரண்டு மாநிலங்களும் சுற்றி திறிந்தும் அவரது தந்தைக்கு மருத்துவமனையில் அனுமதி கிடைக்காத நிலையில், ஆம்புலன்ஸில் அவரது தந்தைக்கு வழங்கப்பட்டுக்கொண்டிருந்த ஆக்சிஜன் அளவும் குறைந்துகொண்டே வந்துள்ளது. இந்த நிலையில் மருத்துவமனை வெளியே காத்திருந்த அவரிடன் ஊடகம் ஒன்று பேட்டி எடுத்தது.

அப்போது அந்த ஊடகத்திற்கு பேட்டியளித்த சாகர் கிஷார், “எனது தந்தைக்கு மருத்துவமனையில் படுக்கை வசதிகளை ஏற்பாடு செய்யுங்கள் அல்லது ஊசி போட்டுக் கொன்றுவிடுங்கள். என்னால் அவரை இந்த நிலைமையில் வீட்டுக்கு அழைத்துச் செல்ல இயலாது. உங்களிடம் படுக்கைகளும் இல்லை” என கண்ணீருடன் பேசிய வீடியோ பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தொற்று பரவலை இயற்கை பேரிடராக அறிவிக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி அளிக்க மாநில பேரிடர் நிதியை பயன்படுத்த அனுமதி அளிக்க வேணடும் என்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் மத்திய மோடி அரசாங்கம் தற்போது வரை எந்த முடிவையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories