இந்தியா

“கள்ளச்சாராய பாட்டில்கள் காணாமல் போனதற்கு யார் காரணம் தெரியுமா?” - எலி மீது பழி போட்ட உ.பி. போலிஸ்!

உத்தர பிரதேச மாநிலத்தில், பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்கள் காவல்நிலையத்தில் இருந்து மாயமானதற்கு எலிகளே காரணம் என போலிஸாரின் பதிலை கேட்டு மூத்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

“கள்ளச்சாராய பாட்டில்கள் காணாமல் போனதற்கு யார் காரணம் தெரியுமா?” - எலி மீது பழி போட்ட உ.பி. போலிஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தர பிரதேச மாநிலம், இட்டா மாவட்டத்துக்கு உட்பட்ட கோட்வாலி தெகாட் பகுதியில் காவல்நிலையம் ஒன்று உள்ளது. இந்த காவல்நிலையத்தில், பறிமுதல் செய்யப்பட்ட கள்ளச்சாராய பாட்டில்கள் 1,400க்கும் மேற்பட்ட அட்டைப்பெட்டிகளில் இருந்துள்ளன. இந்த மதுபானங்கள் திடீரென மாயமானதாக கடந்த வாரம் மூத்த அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, உயரதிகார்கள், கோட்வாலி தெகாட் காவல்நிலைய போலிஸாரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் கள்ளச்சாராய பாட்டில்கள் மாயமானதற்கு எலிகள்தான் காரணம் எனக் கூறியுள்ளனர். மேலும், 239 அட்டைப்பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த கள்ளச்சாராயம் எலிகளால் சேதப்படுத்தப்பட்டதாக காவல்நிலைய குறிப்பேட்டில் எழுதிவைத்துள்ளனர். இதைப் பார்த்து காவல்துறை உயரதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர், கோட்வாலி தெகாட் காவல் நிலைய ஆய்வாளர் இந்ரேஷ்பால் சிங் மற்றும் கிளார்க் ரிஷால் சிங் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் பறிமுதல் செய்யப்பட கள்ளச்சாராய பாட்டில்கள் என்னவாகின என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனை அறிந்த நெட்டிசன்கள், “ஏம்ப்பா பொய் சொன்னா அத பொருந்துறமாதிரியாவது சொல்லனும், மதுபான பாட்டிலை ஆட்டைய போட்டுட்டு, எலி மீதா பழியைப் போடுவது?” என கிண்டல் செய்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories