இந்தியா

சேனல்களை சட்டவிரோதமாக ஸ்ட்ரீமிங் செய்து பலநூறு கோடி மோசடி செய்த நிறுவனம்... சைபர் கிரைம் நடவடிக்கை!

உலகெங்கிலும் தொலைக்காட்சி சேனல்களை சட்டவிரோதமாக ஒளிப்பரப்பிய பாஸ் ஐபிடிவி நிறுவனம் மீது கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் சைபர் கிரைம் போலிஸார் 6 பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர்.

சேனல்களை சட்டவிரோதமாக ஸ்ட்ரீமிங் செய்து பலநூறு கோடி மோசடி செய்த நிறுவனம்... சைபர் கிரைம் நடவடிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா பாதுகாப்பிற்கான மாஸ்க்குகள் மற்றும் பி.பி.இ கிட்களை தயாரிக்கும் ரைஸ்லி பிரைவேட் லிமிடெட் நிறுவனம், பாஸ் ஐபிடிவி எனும் நிறுவனம் பல்வேறு இந்திய மற்றும் சர்வதேச ஒளிபரப்பாளர்களிடமிருந்து சட்டவிரோதமாக சிக்னல்களைத் திருடி வருவதாகவும், அவற்றை ஒளிபரப்புவதாகவும் குற்றம்சாட்டி, ஃபரிதாபாத் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதனடிப்படையில் boss iptv நிறுவனத்தின் மீது வழக்கு பதியப்பட்டது.

பாஸ் ஐபிடிவி என்பது ஐ.பி முகவரியைப் பயன்படுத்தி தொலைக்காட்சி சேனல்களை சட்டவிரோதமாக ஸ்ட்ரீம் செய்யும் மோசடி நிறுவனமாகும். இந்த நிறுவனம் இந்திய தொலைக்காட்சி நிறுவனங்களின் ஒளிபரப்பை சட்டவிரோதமாக ஹேக் செய்து இந்திய ரூபாயில் 820 கோடி மோசடி செய்துள்ளது. இதனால் முன்னணி நிறுவனமான yupp tv பெரும் நஷ்டத்தை சந்தித்ததுள்ளது.

ஸ்டார், கலர்ஸ் உள்ளிட்ட முக்கிய தனியார் தொலைக்காட்சி சேனல்களும் பாஸ் ஐபிடிவிக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு ஆதரவாக உள்ளனர். பைரேட் கார்டெல் எனும் நிறுவனம் கூறுகையில், “இந்த நிறுவனம் இந்திய தொலைக்காட்சி சேனல்களை சட்டவிரோதமாக ஒளிப்பரப்பி பணம் சம்பாதித்து வருகிறது. இதனால் பல முன்னனி நிறுவனங்கள் இழப்பீட்டை சந்தித்துள்ளன” எனத் தெரிவித்தது.

மேலும், இந்நிறுவனம் 400க்கும் மேற்பட்ட சேனல்களை ஸ்ட்ரீம் செய்துள்ளதாகவும், 70 முதல் 80 வரையிலான மார்க்கெட் மதிப்பை இந்த நிறுவனம் மோசடி செய்ததும் கூடுதல் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த நிறுவனத்தை நடத்தி வரும் 6 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டது. இந்த சம்பவம் இந்திய தொலைக்காட்சி நிறுவனங்களிடையே அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories