ஜம்மூ - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அம்மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டது. இதையொட்டி முன்னாள் முதலமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களை மத்திய பா.ஜ.க அரசு வீட்டு காவலில் சிறை வைத்து. மேலும் இணையச் சேவையையும் முற்றிலுமாக மத்திய அரசு துண்டித்தது.
இப்படி, மாநில மக்கள் மீது அடக்குமுறையை ஏவியது. மேலும் ஜம்மூ - காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவில் இருந்து துண்டித்து, அங்கு என்ன நடக்கிறது என்றே யாரும் தெரிந்து கொள்ளாதபடி அராஜகமாக நடந்து கொண்டது மத்திய பா.ஜ.க அரசு.
மத்திய அரசு இந்த நடவடிக்கைக்கும், தலைவர் வீட்டு சிறையில் வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து, பல மாதங்களாக சிறையாக்கப்பட்டிருந்த தலைவர்களை விடுதலை செய்தது. இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துள்ளா, ஒமர் அப்துல்லா ஆகியோர் மீண்டும் வீட்டு காவலில் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து தேசிய மாநாடு கட்சியின் மூத்த தலைவர் ஒமர் அப்துல்லா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “நான், எனது தந்தையும் எம்.பி.யுமான பரூக் அப்துல்லா உள்ளிட்ட எனது குடும்பத்தினர் அனைவரும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளோம். இதுதான் புதிய ஜனநாயகமா? எவ்வித விளக்கமும் அளிக்காமல் எங்களை வீட்டுக் காவலில் வைத்தது ஏன்” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.