இந்தியா

“பசி - வேலையின்மை - தற்கொலை என மக்களுக்கு 3 வாய்ப்புகளைக் கொடுத்துள்ளார் பிரதமர் மோடி” : ராகுல் விளாசல்!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தில் இன்று மக்களவையில் பேசுகையில், பா.ஜ.க அரசின் வேளாண் சட்டங்களை விளாசினார்.

“பசி - வேலையின்மை - தற்கொலை என மக்களுக்கு 3 வாய்ப்புகளைக் கொடுத்துள்ளார் பிரதமர் மோடி” : ராகுல் விளாசல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

நாடாளுமன்ற மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாத்தில் பங்கேற்று உரையாற்றிய பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகள் வேளாண் சட்டங்களின் உள்ளடக்கம் மற்றும் நோக்கம் பற்றி பேசாமல், கிளர்ச்சியை ஏற்படுத்துவதாகத் தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று மக்களவையில் பேசிய ராகுல் காந்தி எம்.பி., “பிரதமர் மோடி நேற்று உரையாற்றியபோது, எதிர்க்கட்சிகள் வேளாண் சட்டங்களின் உள்ளடக்கம் பற்றி பேசாமல், கிளர்ச்சியை ஏற்படுத்துவதாகக் குற்றம்சாட்டினார். ஆகவே இன்று, மூன்று வேளாண் சட்டங்களின் உள்ளடக்கம் குறித்துப் பேசி, நான் பிரதமரை மகிழ்விக்க எண்ணுகிறேன்.

நாட்டின் முதுகெலும்பாக விவசாயம் உள்ளது. ஆனால் விவசாயத்தை அழிக்கும் நோக்கிலேயே 3 வேணாண் சட்டங்களை மத்திய பா.ஜ.க அரசு கொண்டு வந்துள்ளது. வேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு எந்த நன்மையும் இல்லை.

முதல் வேளாண் சட்டத்தின் சாராம்சம் என்னவென்றால், நாட்டில் எங்கும் உணவு தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளை வரம்பற்ற முறையில் வாங்க முடியும். நாட்டில் எங்கும் கொள்முதல் வரம்பற்றதாக இருந்தால், யார் மண்டிக்கு செல்வார்கள்? எனவே முதல் சட்டத்தின் நோக்கம் மண்டிகளை மூடுவதாகும்.

இரண்டாவது வேளாண் சட்டத்தின் சாராம்சம், பெரிய வணிகர்கள் அவர்கள் விரும்பும் அளவுக்கு உணவு தானியங்கள், காய்கறிகளை பதுக்கி வைக்கலாம். இந்தச் சட்டத்தின் நோக்கம் அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதாகும். இச்சட்டம் இந்தியாவில் வரம்பற்ற பதுக்கலை ஊக்கப்படுத்தும்.

“பசி - வேலையின்மை - தற்கொலை என மக்களுக்கு 3 வாய்ப்புகளைக் கொடுத்துள்ளார் பிரதமர் மோடி” : ராகுல் விளாசல்!

மூன்றாவது வேளாண் சட்டத்தின் நோக்கம் என்னவென்றால், ஒரு விவசாயி தனது பயிர்களுக்கு சரியான விலையைக் கோருவதற்காக இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களிடம்தான் செல்ல முடியுமே தவிர, நீதிமன்றத்திற்குச் செல்ல முடியாது.

கொரோனா தற்போது வேறு வடிவில் உருமாறியிருப்பது போல, ‛நாம் இருவர் நமக்கு இருவர்’ என்னும் முழக்கமும் வேறு வடிவத்தில் வருகிறது. அதாவது, இந்த தேசத்தை 4 பேர் தான் வழி நடத்தி வருகின்றனர். அந்த 4 பேர் யார் என அனைவருக்கும் தெரியும்.

ஆனால், வேளாண் சட்டங்களால் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை என்றும் விவசாயிகளுக்கு வாய்ப்புகள் கொடுப்பதாகவும் பிரதமர் கூறுகிறார். நாட்டு மக்களுக்கு, பசி அல்லது வேலையின்மை அல்லது தற்கொலை என 3 வாய்ப்புகளை பிரதமர் மோடி கொடுத்துள்ளார்.” எனப் பேசினார்.

ராகுல் காந்தியின் பேச்சுக்கு, பா.ஜ.க. எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.

banner

Related Stories

Related Stories