இந்தியா

“என் காலம் உள்ளவரை வங்கத்து புலி போன்றே வலம் வருவேன்” - மேற்கு வங்கத்தில் கர்ஜித்த மம்தா பானர்ஜி!

மேற்கு வங்க மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது.

“என் காலம் உள்ளவரை வங்கத்து புலி போன்றே வலம் வருவேன்” - மேற்கு வங்கத்தில் கர்ஜித்த மம்தா பானர்ஜி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கர்நாடகா, மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை குதிரை பேரம் செய்து தங்கள் கட்சி பக்கம் இழுத்ததை போன்று மேற்கு வங்கத்திலும் அந்த பாணியை தொடர்கிறது பா.ஜ.க. அவ்வகையில் திரிணாமூல் காங்கிரஸில் இருந்து விலகி அண்மையில் பா.ஜ.கவில் சிலர் இணைந்தனர்.

இந்த நிலையில், புருத்வான் நகரில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தின் போது முதலமைச்சர் மம்தா பானர்ஜி மோடி அரசையும், பாஜகவையும் விமர்சித்து பேசியுள்ளார்.

“என் காலம் உள்ளவரை வங்கத்து புலி போன்றே வலம் வருவேன்” - மேற்கு வங்கத்தில் கர்ஜித்த மம்தா பானர்ஜி!

அப்போது, பாஜக அரசு நாட்டை சுடு காடாக மாற்றியது போல், மேற்கு வங்கத்தையும் சுடுகாடாக்குவதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. அதற்கு ஒரு போதும் அனுமதிக்க மாட்டேன். நான் பலவீனமடையவில்லை. வாழும் காலம் வரை வங்கத்து புலியை போன்றே இருப்பேன். வலிமையாக தலை நிமிர்ந்தபடியே வாழ்வேன்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை விட்டு சில கெட்ட சக்திகள் விலகியது நன்மைக்கே. பாஜக தலைவர் ஜே.பி.நட்டா பேசுகையில், மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டில் இல்லை என்று கூறியிருக்கிறார். தாய்மார்களே, சகோதரிகலே பொது வெளியில் செல்கையில் அச்சமாக இருப்பதாக உணர்கிறீர்களா? உடன் எவரையும் துணைக்கு அழைத்துச் செல்கிறீர்களா?

என்பதை அவர்களது செவிகளுக்கு எட்டும் வகையில் உரக்கச் சொல்லுங்கள். எதிர்வரும் தேர்தல் மூலம் மாநிலத்தை விட்டு பாஜக வெளியேச் செல்வதற்கான கதவுகலை மக்கள் திறப்பார்கள்.” எனக் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories