ரஷ்யாவைச் சேர்ந்த சர்வதேச டென்னிஸ் வீராங்கனையான மரியா ஷரபோவா கடந்த 2014ம் ஆண்டு “யார் அந்த சச்சின்?” என ஒரு கேள்வி கேட்டிருந்தார். அது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மரியா தமக்கு உண்மையிலேயே சச்சின் பற்றித் தெரியாது என விளக்கம் அளித்தும், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அவரை கடுமையாகக் கேலி செய்து முகநூல் பக்கத்தில் பதிவிட்டனர். குறிப்பாக, கேரளாவைச் சேர்ந்த ஏராளமானோர் மரியாவின் முகநூல் பக்கத்தில் கிரிக்கெட் கடவுளான சச்சினைத் தெரியாதா? என மரியா ஷரபோவாவை கேலி செய்தார்கள்.
ஆனால், இன்று அவ்வாறு கேலி செய்தோர் பலரும் மரியாவிடம் மன்னிப்பு கோரி ட்விட்டரில் பதிவிடுகின்றனர். தற்போது #SorryMariaSharapova என்னும் ஹேஷ்டேக் மிகவும் டிரண்டாகி வருகிறது. டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு எதிராகவும், மோடி அரசுக்கு ஆதரவு தெரிவித்தும் சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவே இதற்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.
இந்த ட்விட் மூலம் உலக அளவில் சச்சின் மீது எழுந்துள்ள வெறுப்பால் மரியாவிடம் ஏராளமானோர் மன்னிப்பு கேட்டு அவருடைய முகநூல் பக்கத்தில் பின்னூட்டம் இட்டுள்ளனர்.