இந்தியா

“இந்தியா விற்பனைக்கு” : கார்ப்பரேட்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்த நிர்மலா சீதாராமனின் 2021 பட்ஜெட் !

ஐந்து மாநிலத் தேர்தலை மனதில் கொண்டு மத்திய அரசு பட்ஜெட்டை வெளியிட்டிருந்தாலும் தமிழகத்திற்கு எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்ற குற்றச்சாட்டி எழுந்துள்ளது.

“இந்தியா விற்பனைக்கு” : கார்ப்பரேட்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்த நிர்மலா சீதாராமனின் 2021 பட்ஜெட் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜனவரி 29 அன்று துவங்கி நடைபெற்று வருகிறது. துவக்க நாளில் ஜனாதிபதி உரையை 20 எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. விவசாயிகளுக்கு விரோதமாக மத்திய பா.ஜ.க அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி இந்த புறக்கணிப்பு நடவடிக்கையை மேற்கொண்டன.

இந்நிலையில் இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. எந்த முன்னேற்பாடும் செய்யப்படாமல் மத்திய பா.ஜ.க அரசு அமல்படுத்திய கொரோனா ஊரடங்கால் ஏழை எளிய மக்கள் மற்றும் தொழிலாளர்கள், சிறு தொழில் முனைவோர்கள் மிகவும் அவதிப்பட்டனர்.

இந்நிலையில், கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் என்பதால் பல்வேறு துறையினரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். ஆனால் வழக்கம்போல இந்தாண்டும் ஐந்து மாநிலத் தேர்தலை மனதில் கொண்டு மத்திய அரசு பட்ஜெட்டை வெளியிட்டிருந்தாலும் தமிழகத்திற்கு எந்த ஆக்கப்பூர்வமான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

“இந்தியா விற்பனைக்கு” : கார்ப்பரேட்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்த நிர்மலா சீதாராமனின் 2021 பட்ஜெட் !

முதல் முறையாக டிஜிட்டல் வழியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த பட்ஜெட்டில் 3,768 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. மேலும், நாட்டின் வருவாயை பெருக்கும் வகையில் பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள சொத்துக்களை பணமாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ரயில்வே துறையில் சிறப்பு வழித்தடங்கள் ஏற்படுத்தப்பட்டு அதன் மூலமாகவும் விமானப் போக்குவரத்துத் துறையில், மேலும் சில விமான நிலையங்களை தனியாருக்கு வழங்குவதன் மூலமாகவும் இத்தகைய பணமாக்கல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், கடும் எதிர்ப்புகளையும் மீறி, ஏர் இந்தியா விமான நிறுவனத்தை விற்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. மேலும், எந்தெந்த பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்கலாம் என்பது குறித்த புதிய பட்டியலை இந்திய அரசு தயார் செய்யும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

“இந்தியா விற்பனைக்கு” : கார்ப்பரேட்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்த நிர்மலா சீதாராமனின் 2021 பட்ஜெட் !

அதுமட்டுமல்லாது, இரண்டு பொதுத்துறை வங்கிகள், ஒரு காப்பீட்டு நிறுவனம் ஆகியவை தனியார்மயமாக்கப்படவுள்ளன. அதில், எல்.ஐ.சியின் தகுந்த சட்டத் திருத்தத்தைத் தொடர்ந்து, பங்குகள் வெளியிடப்படவுள்ளன. மேலும், மாநிலங்கள் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பது குறித்து முடிவெடுக்கலாம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் சாராம்சம் என்னவென்றால், மாநிலங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்க முடிவு எடுத்தால், அந்த பங்குளை மத்திய அரசே வாங்கி தனியாரிடம் ஒப்படைக்கும் என்பதாகும்.

அதேபோல், விவசாயம் மற்றும் கல்விக் கடன் தள்ளுபடி குறித்து பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை. மேலும், பல விமான நிலையங்களில் பராமரிப்பு பணி தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படும்.

மேலும் மின் விநியோகத்தில், தனியாருக்கு அனுமதி, கப்பல் கழகத்தில் தனியாருக்கு அனுமதி வழங்கிய, மத்திய பா.ஜ.க அரசு, இனி அரசிடம் இருக்கும் பொதுத்துறையின் இருப்பை முழுமையாக குறைத்துக் கொள்ளப்போவதாகவும் அறித்துள்ளனர். இதன் மூலம் நாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களை முழுவதும் தனியாரிடம் ஒப்படைக்கப்போவது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது.

“இந்தியா விற்பனைக்கு” : கார்ப்பரேட்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்த நிர்மலா சீதாராமனின் 2021 பட்ஜெட் !

மேலும் பட்ஜெட்டில் இடம்பெற்றவை:

கொரோனா தடுப்பூசிக்காக ரூ.35,000 கோடி செலவிடப்படும். கொரோனா தடுப்பூசிக்காக தேவைப்பட்டால் கூடுதலாக நிதி ஒதுக்கப்படும்.

நகர்ப்புற தூய்மை திட்டத்திற்கு ரூ.1.41 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உள்கட்டமைப்பு வசதிக்கு 2021-22 நிதியாண்டில் ரூ.20,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சுகாதாரத் துறைக்கு ரூ.2.23 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 17,000 கிராமப்புற மற்றும் 11,000 நகர்ப்புற சுகாதார மையங்கள் அமைக்கப்படும்.

குழாய் மூலம் எரிவாயு வழங்கும் திட்டம் மேலும் 100 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.

விவசாயிகளுக்கு கடன் வழங்குவதை அதிகப்படுத்த ரூ.16.5 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறு, குறு தொழில் வளர்ச்சிக்காக ரூ.15,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உலகிலேயே கார்ப்பரேட் வரி இந்தியாவில் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த பட்ஜெட் வாசிப்பு 1 மணி நேரம் 50 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்றது. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து மக்களவையை ஒத்திவைத்து சபாநாயர் ஓம் பிர்லா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories