“வேளாண் சட்டங்கள் நிறைவேற காரணமாக இருந்த முதல்வர் பழனிசாமி, விவசாயிகளிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்”
- தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டி
ஹரியானா மாநிலத்தில் பல்வல், சோனிபட் உள்ளிட்ட பல இடங்களில் இன்று மாலை 5 மணி முதல் மொபைல் இணையதள சேவை தற்காலிக நிறுத்தம்.
ஐ.டி.ஓ பகுதியில் டெல்லி போலிஸ் தலைமையகம் எதிரே உயிரிழந்த விவசாயியின் உடலோடு விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர்.
உயிரிழந்த விவசாயிக்கு தேசியக்கொடியைப் போர்த்தி அங்கேயே அஞ்சலி செலுத்திவருகிறார்கள்.
ஜனநாயகத்தை போற்றுகிற குடியரசு தினத்தில் சர்வாதிகாரத்தை கட்டவிழ்த்துவிடுவதை ஒருபோதும் ஏற்க முடியாது.
- தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
டெல்லியில் க்ரே வழித்தடத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்கள் திறக்கப்பட்டு, வழக்கமான போக்குவரத்து தொடங்கியுள்ளதாக அறிவிப்பு!
டெல்லியில் நிலவும் அசாதாரண சூழல் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா, உயர் அதிகாரிகள் உடன் ஆலோசனை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.
போலிஸ் தாக்குதலில் உத்தரகாண்ட் மாநில விவசாயி உயிரிழப்பு. உயிரிழந்த விவசாயியின் உடலில் மூவர்ணக் கொடியைப் போர்த்தி விவசாயிகள் சாலை மறியல்!
விவசாயிகள் போராட்டம் நடைபெறும் சிங்கு, காசிபூர், திக்ரி உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் இன்று நள்ளிரவு வரை இணைய சேவை துண்டிப்பு!
குடியரசு நாளில் டிராக்டர் பேரணி சென்ற விவசாயிகள் மீது சரமாரியாக தாக்கும் டெல்லி போலிஸார்..
குடியரசு தினமான இன்று விவசாயகள் கூட்டமைப்பு அறிவித்தது படி, டெல்லியை நோக்கி டிராக்டர் முற்றுகை போராட்டம் தொடங்கியது. காலை முதல் லட்சக்கணக்கான விவசாயிகள் வரிசைகட்டி டெல்லிக்குள் நுழைய முற்பட்டனட். உச்ச நீதிமன்றம் போராட அனுமதியளித்தும், காவல் துறை அவர்களை தடுத்து நிறுத்தி தாக்குதல் நடத்தியது. கண்ணீர் புகை குண்டுகள் வீசி விவசாயிகள் முன்னேறுவதை தடுக்க போலிஸ் படை முயற்சி செய்தது. இதற்கு விவசாயிகளும் எதிர்வினையாற்றவே அங்கு அசாதாரண சூழல் நிலவியது. விவசாயிகள் மீது போலிஸ் கொலை வெறித்தாக்குதலைத் தொடங்கியது.
டிராக்டர்களில் வரும் விவசாயிகளை சுற்றி வளைத்து கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த வீடியோ காட்சிகள் இங்கே.