இந்தியா

தொடர்ந்து சரியும் தங்கத்தின் விலை... தமிழகத்தில் இன்றைய நிலவரம் என்ன?

ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் குறைந்து ரூ.4,677 க்கு விற்பனையாகிறது.

தொடர்ந்து சரியும் தங்கத்தின் விலை... தமிழகத்தில் இன்றைய நிலவரம் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ. 3 குறைந்து ரூ.4,677 க்கு விற்பனையாகிறது.

தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடான தங்கத்தில் அதிகளவில் முதலீடு செய்து வந்தனர். இதனால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.

அமெரிக்க டாலரின் மதிப்பு தற்போது தொடர்ந்து வலுவடைந்து வரும் நிலையில், தங்கத்தின் விலை சரியத் தொடங்கியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் சர்வதேச சந்தையில் தங்கம் பலத்த சரிவினைக் கண்டு வந்தாலும் இந்தியாவில் தங்கத்தின் விலையில் குறைந்த அளவிலேயே சரிவு காணப்படுகிறது.

இந்நிலையில் தங்கத்தின் விலை இன்றும் குறைந்துள்ளது. நேற்று மாலை நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 144 உயர்ந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ. 24 விலை குறைந்துள்ளது.

சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,677 ஆகக் குறைந்துள்ளது. ஆபரணத் தங்கம் இன்று சவரன் ரூ.37,416-க்கு விற்பனையாகிறது.

24 காரட் தூய தங்கத்தின் விலை ஒரு கிராம் இன்று ரூ.5,061 ஆக குறைந்துள்ளது. அதேபோல, ஒரு சவரன் 24 காரட் தங்கம் நேற்று 40,512 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், இன்று 40,488 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

banner

Related Stories

Related Stories