ஹரியானா மாநிலத்தில் முதலமைச்சர் மனோகர்லால் கட்டார் நடத்திய வேளாண் மசோதாக்கள் குறித்த விளக்கக் கூட்டத்திற்கு டெல்லியின் எல்லைகளில் போராட்டம் நடத்தி வந்த விவசாயிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதனால் அந்த விளக்கக் கூட்டம் நடைபெறும் இடத்துக்கு சென்ற விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். மேலும் கண்ணீர் புகை குண்டுகள் வீசி தடுத்தனர்.
இதனால் கேம்லா கிராமம் போர்க்களம் போல் காணப்பட்டது. வயலுக்குள் இறங்கி விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதில் பல விவசாயிகள் காயமடைந்தனர்.
இதன் காரணமாக அந்த கிராமத்தில் நடைபெற இருந்த விளக்க கூட்டத்தை முதலமைச்சர் மனோகர்லால் கட்டர் ரத்து செய்துவிட்டு புறப்பட்டு சென்றார். அங்கிருந்த பல பாஜக எம்.எல்.ஏக்களை போலீசார் அழைத்துச் சென்றனர். இதனால் கர்னால் பகுதியில் பதட்டம் நிலவுகிறது.