இந்தியா

“தாகூரின் கருத்தை உள்வாங்கிக் கொள்ளாமல் பிரதமர் மோடி திரித்துக் கூறுகிறார்” : மே.வங்க அமைச்சர் சாடல்!

தாகூரின் தேசியம் பற்றிய கருத்தை உள்வாங்கிக் கொள்ளாமல் பிரதமர் திரித்துக் கூறுவதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அமைச்சர் பிரத்யா போஸ் விமர்சித்துள்ளார்.

“தாகூரின் கருத்தை உள்வாங்கிக் கொள்ளாமல் பிரதமர் மோடி திரித்துக் கூறுகிறார்” : மே.வங்க அமைச்சர் சாடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பிரதமர் மோடி தொடங்கி பா.ஜ.க அமைச்சர்கள், பா.ஜ.க தலைவர்கள் வரை அனைவருமே வரலாற்றைத் திரித்துக் கூறுவதையே வாடிக்கையாக வைத்துள்ளனர்.

சுதந்திரப் போராட்டங்களில் ஈடுபடாத ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள், சுதந்திரத்திற்கு போராடி சிறை சென்றதாக பொய் வரலாற்றை உருவாக்கி மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றனர். அதுமட்டுமல்லாது முக்கிய தலைவர்களின் கருத்துகளையும் தங்கள் சிந்தாந்தங்களுக்கு ஏற்றவாறு மாற்றிக் கூறுவதையும் வாடிக்கையாக வைத்துள்ளனர்.

அந்த வகையில், தாகூரின் தேசியம் பற்றிய கருத்தை பிரதமர் மோடி மாற்றிக் கூறியதாக மேற்கு வங்க அமைச்சர் பிரத்யா போஸ் குற்றம்சாட்டியுள்ளார். சமீபத்தில் பல்கலைக்கழக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற பிரதமர் மோடி, ரவீந்திரநாத் தாகூரின் வழிகாட்டுதலில் இந்தப் பல்கலைக்கழகம் இந்திய தேசிய உணர்வுகளை தன்னகத்தே கொண்டது என்றும் பேசியுள்ளார்.

“தாகூரின் கருத்தை உள்வாங்கிக் கொள்ளாமல் பிரதமர் மோடி திரித்துக் கூறுகிறார்” : மே.வங்க அமைச்சர் சாடல்!

மேலும், ரவீந்திரநாத் தாகூர் தேசியம் பற்றி பேசியதாகவும், அவரிமிருந்து தான், தற்சார்பு இந்தியா திட்டம் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடியின் இத்தகைய கருத்தை விமர்சித்துள்ள பிரத்யா போஸ், “பிரதமர் தேசியவாதம் குறித்து பேசியிருக்கிறார்.

அப்போது தாகூரின் தேசியம் பற்றிய கருத்தை உள்வாங்கிக் கொள்ளாமலும் பிரதமர் திரித்துக் கூறியிருக்கிறார். ரவீந்திரநாத் தாகூர் தேசியம் என்பது பிளவுபடுத்தும் ஒன்று என்றுதான் கூறினார். அவர் மதத்தை பிளவு படுத்துவதை ஆதரிக்கவில்லை. அவரின் நாவலான ‘கரே பைரே’ தேசியம் குறித்த நாவல்தான்.

அதில், தேசியம் என்பது ஒரு போதை. அது பிளவுபடுத்துவது என்பதுதான் என்று கூறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமல்லாது, தாகூரைப் புரியாமலும் அவர் என்ன மதிப்பீடுகளை உயர்த்திப் பிடித்தாரோ அதை உள்வாங்கிக் கொள்ளாமலும் அரசியல் பற்றி பேசுகிறார்கள்” எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories