இந்தியா

ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ56 வரி - கந்துவட்டியை விட மோசமாக கொள்ளையடிக்கும் அரசுகள்!

ஒவ்வொரு நடுத்தரக் குடும்பத்திற்கும் தினமும் 1 லி பெட்ரோல் என்பது அடிப்படைத் தேவையாக மாறியுள்ளது. ஒவ்வொரு லிட்டர் பெட்ரோலுக்கும் எவ்வளவு வரி கட்டுகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?

ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ56 வரி - கந்துவட்டியை விட மோசமாக கொள்ளையடிக்கும் அரசுகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

கந்துவட்டி வரி.. கொள்ளையடிக்கும் அரசுகள்… (பெட்ரோல் & டீசல்)

இன்றைய அடிப்படைத் தேவைகளுள் ஒன்றாகிவிட்டது பெட்ரோல் மற்றும் டீசல். ஒவ்வொரு நடுத்தரக் குடும்பமும் மாதாந்திர பட்ஜெட்டில் ஒரு குறிப்பிட்ட பங்கினை பால், காய்கறி , தண்ணீரோடு சேர்த்து பெட்ரோலுக்கும் ஒதுக்கிவைக்க வேண்டியது கட்டாயமாகிறது. சென்னையில் மட்டும் இரண்டு பேரில் ஒருவர் இருசக்கர வாகனம் வைத்துள்ளதாக ஒரு ஆய்வறிக்கை சொல்கிறது. ஒவ்வொரு நடுத்தரக் குடும்பத்திற்கும் தினமும் 1 லி பெட்ரோல் என்பது அடிப்படைத் தேவையாக மாறியுள்ளது. அப்படி இருக்க நீங்கள் போடும் ஒவ்வொரு லிட்டர் பெட்ரோலுக்கும் எவ்வளவு வரி கட்டுகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா.?

*PPAC அதிகாரபூர்வதகவல்
*PPAC அதிகாரபூர்வதகவல்

27 ரூபாய் 78 பைசாவிற்கு கொள்முதல் செய்யப்படும் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு மத்திய அரசு 32 ரூபாய் 98 பைசாவை வரியாக வசூலிக்கிறது. கிட்டத்தட்ட ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 120% வரியை விதிக்கிறது மத்திய அரசு. தமிழ்நாடு அரசானது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 15% வரியுடன் 13 ரூபாய் 9 பைசாவை சேர்த்து மொத்தம் 22 ரூபாய் 62 பைசா வரியாக வசூலிக்கிறது. மொத்தமாக மத்திய மாநில அரசுகள் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு சுமார் 56 ரூபாயை வரியாக மக்களிடமிருந்து வசூலிக்கின்றன. கிட்டத்தட்ட பெட்ரோலின் மீது 190 % வரி விதிக்கப்படுகிறது. இது கந்துவட்டியை விடக் கொடுமையானது.

மூலப்பொருளான கச்சா எண்ணெய் விலை உலகச் சந்தையில் ஒரு பேரல் 46 டாலராக குறைந்துள்ள இந்தச் சூழலில் கூட பெட்ரோல் விலையினை குறைக்காமல், வரியை மட்டும் அதிகரித்தபடி இருக்கின்றன அரசுகள். பெட்ரோல் விலை நிர்ணயத்தை தனியாரிடம் விட்டுவிட்டோம். ஆகவே தங்களுக்கு அதில் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதுபோல் ஒரு புறம் காட்டிக்கொண்டு மறுபுறம் கந்துவட்டி, மீட்டர் வட்டியை விட அதிகமாக மக்களிடம் இருந்து வரி வசூல் வேட்டையை செய்கின்றன மத்திய மாநில அரசுகள்.

ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ56 வரி - கந்துவட்டியை விட மோசமாக கொள்ளையடிக்கும் அரசுகள்!

இதே நிலை தான் டீசலுக்கும். கடந்த நான்கைந்தாண்டுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையினை கிட்டத்தட்ட சமப்படுத்திவிட்டனர். ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.80. டீசலின் விலையேற்றம் என்பது ஒட்டுமொத்த விலைவாசி உயர்விற்கு வித்திடும். சரக்குப் போக்குவரத்திற்கான வாடகை அதிகரிப்பை விற்பனை பொருட்களின் மீது சுமத்தி மீண்டும் அது மக்களிடமிருந்தே வசூலிக்கப்படுகிறது.

சந்தையில் விலைவாசி உயர்ந்து மக்களின் வாங்கும் திறன் கணிசமாக குறைகிறது. ஒரு புறம் கொரானோவினால் பல குடும்பங்கள் பொருளாதார நெருக்கடியில் தவிக்கின்றன. தினமும் கடன் பிரச்சனைகளால் குடும்பம் குடும்பமாக தற்கொலை செய்து கொள்வது அதிகரிக்கிறது. பல பேர் வேலைவாய்ப்பின்றி தவிக்கின்றனர். இச்சூழலில் பெட்ரோல் மற்றும் டீசலின் மீதான கருணையற்ற வரிவிதிப்பு நடுத்தரக் குடும்பங்களை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்குகிறது.

விவசாயத்தில் இடைத்தரகர்களை ஒழித்து விலைவாசியைக் குறைப்போம் என கூறிக்கொள்ளும் அரசுகள் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையில் இடைத்தரகராய் செயல்பட்டு கந்துவட்டி வரி வசூலிப்பதை எப்போது நிறுத்துவார்கள்?

- தாரை கோ. மகேஷ்

banner

Related Stories

Related Stories