இந்தியா

“டெல்லியில் குளிர், விபத்து காரணமாக 20 விவசாயிகள் பலி” : அரசின் பிடிவாதத்தால் தொடரும் போராட்டம்!

டெல்லியில் கடும் குளிரிலும் விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில் இதுவரை 20 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

“டெல்லியில் குளிர், விபத்து காரணமாக 20 விவசாயிகள் பலி” : அரசின் பிடிவாதத்தால் தொடரும் போராட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மத்திய பா.ஜ.க அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், டெல்லி எல்லையில் கடந்த 21 நாட்களாக தொடர்ப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், வேளாண் சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்காததால், 5ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததுள்ளது. அதேவேளையில், விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று மத்திய அரசு வற்புறுத்தி வருகிறது.

ஆனால் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற முடியாது என்றும் முரண்டு பிடித்து வருகிறது. தங்களின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்காததால் விவசாயிகள் போராட்டத்தை மேலும் தீவிரமாக்கியுள்ளனர். ஒருபக்கம் பேச்சுவார்த்தைக் தோல்வியில் முடிந்தாளும் போராட்டத்தை விடாப்பிடியாக விவசாயிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

“டெல்லியில் குளிர், விபத்து காரணமாக 20 விவசாயிகள் பலி” : அரசின் பிடிவாதத்தால் தொடரும் போராட்டம்!

இதனால் கடும் குளிரிலும் விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில் இதுவரை 20 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக டெல்லியில், போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள பாதிக்கும் மேலானோர் முதியவர்கள். தாங்கள் வந்த டிராக்டர்களில்தான் இவர்கள் இரவு தூங்குகிறார்கள்.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் மொகாலி மற்றும் பாட்டியாலா மாவட்டங்களில் இருந்து நேற்று டெல்லி நோக்கி வந்த விவசாயிகள் இரு வேறு விபத்துகளில் சிக்கியதில் 4 பேர் உயிரிழந்தனர். 8 பேர் காயமடைந்தனர்.

இதனை தொடர்ந்து இதுவரை குளிர் மற்றும் விபத்து காரணமாக பலியான விவசாயிகளின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் பஞ்சாப் மாநில அரசு வழங்கியுள்ளது.

“டெல்லியில் குளிர், விபத்து காரணமாக 20 விவசாயிகள் பலி” : அரசின் பிடிவாதத்தால் தொடரும் போராட்டம்!

போராட்டம் தொடங்கிய நாள் முதல் நாள்தோரும் ஒருவர் பலியாகி வருவதாக சிந்துபூர் பாரத கிசான் யூனியன் தலைவர் ஜக்ஜித் சிங் கூறியுள்ளார். அந்த விவசாயிகளுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் வரும் 20-ம் தேதி துக்க தினம் கடைபிடிக்கப்படும் என்றும் அன்று அனைத்து இடங்களிலும் உயிரிழந்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தப்படும் என்று கூறியுள்ளார்.

அதற்காக கிராமங்களிலிருந்து உயிரிழந்த விவசாயிகளின் புகைப்படங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. போராட்டக்களத்தியில் விவசாயிகள் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories