இந்தியா

வேளாண் சட்டங்களுக்கு எதிராக குடியரசு தலைவரை சந்திக்கிறது தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகள்!

விவசாய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி நாளை அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குடியரசுத் தலைவரை சந்திக்கின்றனர்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக குடியரசு தலைவரை சந்திக்கிறது தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அரசு நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பது போன்று தற்போது விவசாயத்தையும், விவசாயிகளையும் பெரு நிறுவனங்களின் கீழ் கொண்டு வருவதற்காக மத்தியில் உள்ள மோடி அரசு 3 புதிய வேளாண் சட்டங்களையும், மின்சார சட்டங்களில் புது திருத்தங்களையும் மேற்கொண்டுள்ளது.

இந்த சட்டங்களை இயற்ற ஜனநாயகப்படி எந்த படி நிலைகளையும் கடைபிடிக்காமல் பெரும்பான்மை பலத்தை பயன்படுத்தி அதனை செயல்படுத்த துடிக்கிறது பாஜக அரசு. இந்த வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியின் சிங்கு எல்லையில் கடந்த 13 நாட்களாக பஞ்சாப், அரியாணா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் ஆகிய பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தீவிரமாக போராடி வருகின்றனர்.

டெல்லியில் நிலவும் குளிர் நிலையையும் பொருட்படுத்தாமல் இரவு பகல் பாராது விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இன்று பாரத் பந்த் எனும் முழு அடைப்பு போராட்டம் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வலியுறுத்தியும் அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் நாளை மாலை 5 மணிக்கு குடியரசுத் தலைவரை சந்திக்க இருக்கின்றனர்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து ராகுல் காந்தி, திமுகவிலிருந்து டிகேஎஸ் இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து சீதாராம் எச்சூரி, தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து சரத்பவார் ஆகியோர் அடங்கிய குழு அனைத்து எதிர்க் கட்சிகள் சார்பாக குடியரசுத் தலைவரை சந்தித்து விவசாயிகள் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்த உள்ளனர்.

banner

Related Stories

Related Stories