பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாக மத்திய மோடி அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்கள் மற்றும் மின்சார சட்டங்களை எதிர்த்து ஹரியானா, பஞ்சாப், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் என நாட்டின் பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் 12வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் தேசிய அளவில் முழு கவனம் ஈர்க்கும் வகையில் நாளை (டிச.,8) நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டமும் நடத்தப்பட இருக்கிறது. இதற்காக தி.மு.க. கூட்டணி கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இது மட்டுமல்லாமல் விவசாயிகளின் போராட்டம் கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் மிகவும் உருக்கமாக பேசியிருந்ததார். இந்நிலையில், இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக வெளிநாடுகளிலும் போராட்டம் வலுக்கிறது. அதன்படி, லண்டனில் நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரக்கணக்கில் இந்தியர்கள் கலந்து கொண்டு மோடி அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.
விவசாயிகளுக்கு ஆதரவாக வெளிநாடுகளிலும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. கனடா, அமெரிக்கா நாடுகளில் கடந்த இரண்டு மூன்று நாட்களாக போராட்டம் நடந்தது. நேற்று லண்டன் நகரில் இந்தியர்கள் பெருமளவில் கூடி போராட்டங்களை நடத்தி இருக்கிறார்கள்.
லண்டனில் உள்ள இந்திய தூதரகம் எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் கலந்து கொண்டார்கள். அவர்கள் மோடி அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.