இந்தியா

மத்திய கல்வி நிறுவனங்களுக்கு தனி தேர்வு.. தமிழகத்தின் குரல், நலனை புறக்கணிக்கும் மோடி அரசுக்கு கண்டனம்!

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களுக்கு மட்டும் நீட் தேர்வில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளதற்கு சு வெங்கடேசன் எம்.வி கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்திய கல்வி நிறுவனங்களுக்கு தனி தேர்வு.. தமிழகத்தின் குரல், நலனை புறக்கணிக்கும் மோடி அரசுக்கு கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

எம்.டி., எம்.எஸ் உள்ளிட்ட உயர் மருத்துவ படிப்புகளில் சேர INI-SET என்ற தனி நுழைவுத்தேர்வை மத்திய பா.ஜ.க அரசு நடத்தத் திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. எய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்ட 11 கல்லூரிகளுக்கு நாட்டின் சீர்மிகு கல்வி நிறுவனங்கள் என அந்தஸ்து அளித்து ‘INI-SET' எனும் பெயரில் தனி நுழைவுத்தேர்வை மத்திய அரசு நடத்துகிறது.

நீட் தேர்விலிருந்து மத்திய அரசின் மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கு மட்டும் விலக்கு அளித்துவிட்டு, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்களிக்க மறுப்பது, மாநில உரிமைகளை அப்பட்டமாகப் பறிக்கும் செயல் எனக் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மதுரை மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மத்திய அரசின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

அதில், “மத்திய அரசு 11 கல்வி நிறுவனங்களுக்கு என்ன காரணம் கொண்டு விலக்கு கொடுத்திருந்தாலும், அது முதலிலே விலக்கு கொடுத்திருக்க வேண்டியது தமிழகத்திற்குத்தான். மருத்துவ மாணவர் சேர்க்கை சம்பந்தமாக இரண்டு சட்ட மசோதாவை நிறைவேற்றியுள்ள ஒரே மாநிலம் தமிழகம் தான்.

ஆனால் அவற்றை எந்த காரணமும் சொல்லாமல் குடியரசு தலைவர் திருப்பி அனுப்பியுள்ளார். தமிழகத்தின் நலனையும், குரலையும் தொடர்ந்து புறக்கணிக்கிற மத்திய அரசுக்கு எதிராக எனது கண்டனத்தைப் பதிவு செய்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories