இந்தியாவில் கொரோனா பாதிப்பால் நாளுக்கு நாள் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கால் இந்தியாவின் பொருளாதாரமும் படுமோசமான நிலையை எட்டியுள்ளது.
இந்தியாவில் ஏற்கெனவே இருந்த பொருளாதார பிரச்சனைக்கு மத்தியில் கொரோனா இந்தியாவை நிலைகுலையச் செய்துள்ளது. குறிப்பாக, கொரோனா பொதுமுடக்க காலகட்டத்தில் 46% மக்கள் கடன் வாங்கி குடும்பச் செலவுகளை கவனித்ததாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 40 ஆண்டுகளுக்கு முன் இருந்த பொருளாதார நிலையைவிட இந்தாண்டு மோசமாக இருக்கும் என்று உலக வங்கி முன்பே எச்சரித்தது. இந்நிலையில், இந்தியப் பொருளாதாரம் செப்டம்பர் - நவம்பர் காலாண்டிலும் மைனஸ் 8.6 சதவிகிதமாக வீழ்ச்சியைச் சந்திக்கும் என்றும் ரிசர்வ் வங்கி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளள்ளது.
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தனது மாதாந்திர (Nowcast) அறிக்கையில், “நடப்பு நிதியாண்டின், ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டில், இந்தியாவின் ஜிடிபி மைனஸ் 8.6 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்துள்ளது” எனத்தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஒரு நாட்டின் பொருளாதாரம் 2 காலாண்டுகள் தொடர்ந்து வீழ்ச்சி அடைந்தால், அந்த நாடு, பொருளாதார மந்த நிலைக்குள் (recession) நுழைந்துள்ளதாக பொருள் கொள்ளப்படும்.
அந்த அந்த வகையில், ஏப்ரல் - ஜூன்காலாண்டில் மைனஸ் 23.9 சதவிகிதம், ஜூலை - செப்டம்பர் காலாண்டில் மைனஸ் 8.6 சதவிகிதம் என்று தொடர் வீழ்ச்சியை சந்தித்து இருப்பதால், இந்தியப் பொருளாதாரம் மந்த நிலைக்குள் நுழைந்திருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் கூறிவருகின்றனர்.