உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துக்கான பரிசோதனை பல நாடுகளில் நடைபெற்று வருகிறது. இதுவரை உலகளவில் 120 தடுப்பு மருந்துகள் ஆய்வு கட்டத்தில் உள்ளன. இதற்கான முயற்சி இந்தியாவிலும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்தியாவிலும் பல மருந்து நிறுவனங்கள் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. குறிப்பாக, புனேவைச் சேர்ந்த பாரத் பயோடெக் என்ற நிறுவனம் கண்டுபிடுத்த COVAXIN என்ற தடுப்பு மருந்து 3-ம் கட்ட பரிசோதனையில் உள்ளது.
மேலும், இந்த சோதனை வெற்றியடைந்தால் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் கோவாக்ஸின் கொரோனா தடுப்பு மருந்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளதாக பாரத் பயோடெக் நிர்வாக இயக்குனர் சாய் பிரசாத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சாய் பிரசாத் கூறுகையில், “மத்திய அரசு அவசர கால ஒப்புதலுக்கு தயாராகலாம் என என்னுகிறோன். இந்த ஒப்புதல் பெற நாங்கள் முந்திச்செல்லவில்லை. அனைத்து விதமான பரிசோதனைகளையும் முடிந்த பின்னரே மருந்துகளை வெளியிட முடிவு செய்துள்ளோம். எல்லாம் சரியானதாக் அமைந்ந்தால், 2021 ஜூன் மாதம் தடுப்பு மருந்து வெளியாகும்” எனத் தெரிவித்துள்ளார்.