உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துக்கான பரிசோதனை பல நாடுகளில் நடைபெற்று வருகிறது. இதுவரை உலகளவில் 120 தடுப்பு மருந்துகள் ஆய்வு கட்டத்தில் உள்ளன. இந்தியாவிலும் பல மருந்து நிறுவனங்கள் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், இந்தியாவில் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகமும், ஆஸ்ட்ரா செனேகா என்ற இந்திய நிறுவனமும் இணைந்து கோவிசீல்டு என்ற தடுப்பூசியைக் கண்டுபிடித்து முதல் மற்றும் அடுத்த கட்ட சோதனை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுகிறது.
இந்நிலையில், உலகில் பல முன்னணி நாடுகளும் கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பில் இருந்த வேளையில், ஆக்ஸ்போர்டு - ஆஸ்ட்ரா செனெகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி ஆறுதல் செய்தியை அளித்து வந்தது.
இறுதி கட்ட சோதனை நிலையை ஆக்ஸ்போர்டு தடுப்பூசி எட்டியுள்ள நிலையில், சோதனையில் பங்கேற்ற ஒருவருக்கு மிகவும் சீரியஸான பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளதையடுத்து சோதனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை சுகாதார இணையதலமான ஸ்டாட் நியூஸ் வெளியிட்டுள்ளது.
இதனிடையே, இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் மக்களிடம் சோதனை செய்யும் அளவுக்கு இந்த தடுப்பூசி வளர்ந்து வந்தது. இந்நிலையில் தீங்கான பக்கவிளைவு ரிப்போர்ட் ஆனதையடுத்து பல நாடுகள் சோதனையை நிறுத்தி வைள்ளனர்.
ஆனால் இந்தியாவில் நிறுத்தப்பட்டவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ஆக்ஸ்போர்டு தடுப்பூசி ஆய்வினை இந்தியாவில் 2 மற்றும் 3 ஆம் கட்ட ஆய்வினை ஏன் நிறுத்திவைக்கவில்லை என்று கேள்வி எழுப்பி சீரம் ஆய்வகத்துக்கு மத்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையர் வி.ஜி.சோமானி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
ஆக்ஸ்ஃபோர்ட் தடுப்பூசியை சென்னை உள்ளிட்ட 17இடங்களில் சோதனை நடத்த திட்டமிடுள்ள மத்திய அரசின் சீரம் ஆய்வகம் அதனை தற்போது நிறுத்திவைக்கத் தேவை இல்லை என்று கூறியிருந்தது. இந்த நிலையில்தான் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஒரு முறை ஆய்வுகளை ஆக்ஸ்போர்டு ஆய்வகம் நிறுத்திவைத்துவிட்டு பின்னர் மீண்டும் தொடங்கியது. எனவே, ஐ.சி.எம்.ஆர் உள்ளிட்ட அமைப்புகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு இந்தியாவிலும் ஆய்வுகளை நிறுத்திவைப்பதா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று சீரம் ஆய்வகத்தின் இயக்குனர் பி.சி நம்பியார் கூறியுள்ளார்.