காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, இந்தியாவின் பொருளாதார சுருக்கத்தை ஆளும் பா.ஜ.க அரசின் மேலும் தீர்க்கமான சாதனை என்று ”IMF GROWTH PROJECTIONS" 2020-21 என்ற அட்டவணையை சுட்டிக்காட்டி மத்திய அரசை விமர்சித்துள்ளார்.
”IMF GROWTH PROJECTIONS" 2020-21 அட்டவணையில், இந்தியப் பொருளாதாரம் மிக அதிக அளவில் சுருங்கியுள்ளது. அதாவது 10.3% இந்த ஆண்டில் மட்டும், அதில் குறிப்பிட்டுள்ள மற்ற நாடுகளை விட இந்தியாவில் தான் அதிக பொருளாதார சுருக்கம் ஏற்பட்டுள்ளதாக காட்டப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா நிலவரத்தைப் பொருளாதார அட்டவணையை சுட்டிக்காட்டி ட்விட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தி, ‘பா.ஜ.க அரசின் மற்றொரு மகத்தான சாதனை இது என்றும் இந்தியாவைவிட கொரோனாவை பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகள் கூட சிறப்பாகக் கையாண்டுள்ளன’ என்பது அந்த அட்டவணையில் தெளிவாகிறது’ என்றும் சாடியுள்ளார்.
முன்னதாக புதன்கிழமை ராகுல் காந்தி ட்விட்டரில் இதேபோன்று சர்வதேச நிதியத்தின் படத்தை வெளியிட்டு மத்திய பா.ஜ.க அரசை விமர்சித்திருந்தார்.
மேலும் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில், தனிநபர் வருவாயில் அண்டை நாடான வங்கதேசம் இந்தியாவை முந்தப்போகிறது என்று விமர்சனம் செய்து கிண்டலாகக் கைதட்டும் படங்களையும் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.