இந்தியா

NEET: தவறவிட்ட மாணவர்களுக்கு அக்.,14ல் தேர்வு.. அக்., 16ல் தேர்வு முடிவுகள்!

கொரோனா பரவல் காரணமாக நீட் தேர்வு எழுத முடியாமல் போன மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

NEET: தவறவிட்ட மாணவர்களுக்கு அக்.,14ல் தேர்வு.. அக்., 16ல் தேர்வு முடிவுகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாட்டில் கொரோனா பரவல் தீவிரமான நிலையில் இருந்த போதும் கடந்த செப்டம்பர் 13ம் தேதி நீட் தேர்வை நடத்தியது மத்திய அரசு.

அதில் , கொரோனா தொற்று பாதிப்பால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை மற்ற பகுதிகளைச் சேர்ந்த மாணாக்கர்கள் நீட் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், நீட் தேர்வு எழுதியவர்களுக்கான முடிவுகள் வருகிற அக்டோபர் 16ம் தேதி வெளியிடப்படும் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதி மற்றும் ஊரடங்கு போன்ற பல்வேறு காரணங்களால் நீட் தேர்வு எழுதாமல் தவறவிட்ட மாணவர்களுக்கு நாளை மறுநாள் (அக்டோபர் 14) தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது எனவும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து உரிய பாதுகாப்புகளுடன் தவறவிட்டவர்களுக்கு தேர்வு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories