பாஜக தலைமையிலான மத்திய அரசின் மக்கள் விரோத சட்டங்களை எதிர்த்தும் அதன் செயல்பாடுகளை எதிர்த்தும் காங்கிரஸ் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
கொரோனா பரவலை தடுப்பதில் மெத்தனம், பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி எனக் கொண்டு வந்து பொருளாதாரத்தை சீரழித்தது என பாஜக சாதனை பட்டியல் நீண்டுக்கொண்டே போகும்.
அந்த வரிசையில் விவாசயிகளை கார்ப்பரேட்டுகளின் அடிமைகளாக்கும் விதமாக கொண்டு வரப்பட்டுள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்தும் ராகுல் காந்தி களத்தில் இறங்கி போராடி வருகிறார்.
இந்த நிலையில், மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகைகளை மத்திய மோடி அரசு வழங்காததைக் கண்டித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் ராகுல் காந்தி.
அதில், மாநில அரசுகளுக்கான ஜிஎஸ்டி வருவாயை மத்திய அரசு வழங்கும் எனக் கூறிவிட்டு தற்போது இழப்பீடு, நிலுவைத் தொகை வழங்க எங்களிடம் பணம் இல்லை என கையை விரித்துள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மாநில அரசுகளை கடன் வாங்கிக்கொள்ளும்படி கூறியுள்ளார்.
கொரோனாவாலும், பிரதமர் மோடியாலும் நாட்டின் பொருளாதாரம் சிதைக்கப்பட்டுள்ள நேரத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான 1.4 லட்சம் கோடி மதிப்பிலான வரிகளுக்கு விலக்களிக்கட்டுள்ளாது.
பிரதமர் மோடியோ தனக்கென 8,400 கோடி ரூபாய் மதிப்பில் 2 சொகுசு விமானங்களை வாங்கியுள்ளார். இவ்வாறு இருக்கையில் மாநில அரசுகள் இன்னமும் ஏன் மோடியிடம் உங்களது எதிர்காலத்தை அடமானம் வைத்துள்ளீர்கள்? என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.